ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM

author img

By

Published : Jun 29, 2021, 1:05 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெளியானது சிஏஜி அறிக்கை: நெருக்கடியில் அதிமுக!

ஏற்கெனவே உள்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு புதிய தலை வலியாக ஒன்றிய கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) குழு சமர்ப்பித்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

'அன்பில் மகேஷ் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் திமுக' - கே.என்.நேருவுடனான பனிப்போர்தான் காரணமா?

மண்ணச்சநல்லூர், துறையூர் பகுதிகளில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை திமுகவினர் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அமைச்சர் கே.என். நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் தடபுடல் வரவேற்பு, தாரை தப்பட்டை, பேனர், பட்டாசு என நிகழ்ச்சி நடக்கும் இடம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

'அணில் மீது பழி?' - ராமாயணத்தை மேற்கொள்காட்டி வானதி பேச்சு

ராமாயண காலத்தில் அணிலுக்கு கூட ராமபிரான் பெருமையை சேர்த்தார். திமுகவினர் அணிலின் மீது பழி சுமத்தி உள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

70ஆவது பிறந்தநாள் 70 வகையான உணவுகள்' - மாமனாருக்கு மருமகளின் சர்ப்ரைஸ்

தனது மாமனாரின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மருமகள் சரண்யா 70 வகையான உணவுப் பண்டங்களை செய்து கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

’நீட் தேர்வு ரத்தா, நடைபெறுகிறதா என ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்’ - புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது தேர்வு நடைபெறுமா என்பது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டுமென அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்: 5,6ஆவது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமானப்பணி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா

நடிகை அனுபமா பரமேஷ்வரன் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே ’இஸ்பேட் ராஜா’ ஹரீஷ் கல்யாண்!

நடிகர் ஹரீஷ் கல்யாண் இன்று (ஜூன்.29) தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.