ETV Bharat / city

சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைதூரப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

author img

By

Published : Aug 12, 2021, 6:38 PM IST

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 15 இளநிலை படிப்புகளும், 20 முதுநிலை படிப்புகளும், 8 முதுநிலைப் பட்டயப்படிப்புகளும், 11 பட்டயப்படிப்புகளும், 7 சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில், இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று (ஆகஸ்ட் 12) வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களுக்கான சேர்க்கை

அதனை, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். கௌரி நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன்படி பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.