ETV Bharat / city

ரூ.100 கோடி நஷ்டஈடு: தோனி தொடர்ந்த வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Dec 9, 2021, 1:59 PM IST

ரூ.100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோனியின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தோனி தொடர்ந்த நஷ்டஈடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு, Dhoni filed 100 cr Defamation Suit, IPS Sampathkumar files petition againist defamation suit of Dhoni
IPS Sampathkumar files petition againist defamation suit of Dhoni

சென்னை: 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்தது குறித்து, விசாரணை நடத்திய ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், தனியார் தொலைகாட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடுக் கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தோனி மீது குற்றச்சாட்டு

தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது.

இந்த சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டி சாட்சியம் அளித்தார். தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டனம் தெரிவித்தது. இதையெல்லாம், மறைத்து தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐபிஎஸ் அலுவலரின் மனு தள்ளுபடி

மேலும், தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை. இந்த மனநிலை சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருகிறது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதும் இல்லை. கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆனால், ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோனி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேசாயி தள்ளுபடி செய்தார். தோனி தொடர்ந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.