ETV Bharat / city

திருவாரூரில் கனமழையால் 2,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் நாசம்

author img

By

Published : Apr 17, 2022, 5:03 PM IST

Updated : Apr 18, 2022, 2:37 PM IST

கன மழையால் 2,000 ஏக்கர் பருத்திகள் நாசமாகின!
கன மழையால் 2,000 ஏக்கர் பருத்திகள் நாசமாகின!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக 2,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் நாசமாகின.

திருவாரூர் மாவட்டத்தில் 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளன. இதனிடையே மூன்று நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவந்தது.

இதனால், பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகள் அழுகி சேதமடைந்தன. அந்த வகையில் 2,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் நாசமாகின. இதுகுறித்து விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

இப்போது லாபம் கிடைக்காமல் கிடைக்காம்ல போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில், வேளாண் துறை சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


இதையும் படிங்க:பலத்த மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை

Last Updated :Apr 18, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.