ETV Bharat / city

ஸ்டாலின் ஆட்சியமைக்க பக்கபலம் - தினேஷ் குண்டுராவ் உறுதி

author img

By

Published : Sep 25, 2020, 2:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் பக்கபலமாக இருக்கும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

leader
leader

தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், ”காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும். அதற்கு காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருந்து பாடுபடும்.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். திமுக தலைவருடனான சந்திப்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கவில்லை.

ஸ்டாலின் ஆட்சியமைக்க பக்கபலம் - தினேஷ் குண்டுராவ் உறுதி

கன்னியாகுமரிக்கு வரும் இரண்டாம் தேதி செல்ல உள்ளேன். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் அது குறித்து தெரிவிக்கப்படும். அடுத்த முறை தமிழகம் வரும் போது கூட்டணிக் கட்சியின் அனைத்து தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னெப்போதும் இல்லாத சூழலில் இந்தியா-சீனா உறவு - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.