ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Feb 21, 2021, 7:22 AM IST

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

NEWS TODAY
NEWS TODAY

விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத் திட்டம்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப்.21) அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

தாமரை இளைஞர்கள் சங்கமத்தில் ராஜ்நாத் சிங்:

சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில், நடைபெறும் "தாமரை இளைஞர்கள் சங்கமம்" மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

மநீம பிரம்மாண்ட மாநாடு:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு

ஈரோடு தொகுதியில் ஸ்டாலின்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று மதியம் 1 மணிக்கு ஈரோடு மாவட்டம் செல்லும் ஸ்டாலின் அங்கு பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

கோவையில் ஒரு வாடிவாசல்:

கோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் காளைகள், 750 காளையர்கள் பங்கேற்கும் இந்த போட்டியை 12 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏறுதழுவுதல்
ஜல்லிக்கட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு:

கோவையில் இன்று நடைபெறும் மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றுப் பேசுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

தலைநகரில் பாஜக தேசியக் குழு கூட்டம்:

பாஜக தேசியக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியா-வியட்நாம் பரஸ்பர பேச்சுவார்த்தை:

இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவான்,  இந்தியப் பிரதமர்  மோடி
வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவான், இந்தியப் பிரதமர் மோடி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.