ETV Bharat / city

'அம்மா உணவகம் மூடப்படாது, இதுவே என் முடிவு'- முதலமைச்சர் ஸ்டாலின் உரை

author img

By

Published : Jan 7, 2022, 1:29 PM IST

Updated : Jan 7, 2022, 2:26 PM IST

அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது, இதுவே எனது முடிவு எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் பேரவைக்கூட்டம் நேற்று முன்தினம் (ஜன.5) ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்றுடன் (ஜன. 7) நிறைவடைகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் உரை

  • போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிதி உதவி வழங்கப்படும். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு ரூ. 132 .12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கான இழப்பீடு ஒரு சில நாள்களிலேயே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • மதுரவாயல் சென்னை துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆட்சியாளர்கள் முடக்கினர். அதிமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை.
  • கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவபுரம் சீரமைக்கப்படாமல் அதிமுக ஆட்சியில் விடப்பட்டது. ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை திமுக அரசு நிறுத்தவில்லை.
  • திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. கரோனாவை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசிதான்.
  • எல்லா அறிவிப்புகளையும் அரசாணையாக வெளியிட்டு செயல்படுத்தி வருகிறோம். உங்களின் அரசாக மட்டுமில்லாமல் உயிர் காக்கும் அரசாக இந்த அரசு வழங்கி வருகிறது.
  • ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
  • கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெரும்பாலானவற்றை ஐந்து மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்.
  • மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இல்லம் தேடி கல்வி திட்டம் முன்மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாததையும் இந்த அரசு செய்து வருகிறது.
  • அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 43 லட்சத்து 61 ஆயிரத்து 518 பேர் பயன் அடைந்துள்ளார்கள்.
  • அரசுப் பள்ளிகள் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 5 ஆயிரத்து 274 பேர் பயன் அடைந்துள்ளார்கள். இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • தேசிய பேரிடர் நிதிக்காக காத்திருக்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பருவமழை பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
  • மழை வெள்ளம் பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. தார்மீக உரிமையும் கிடையாது
    கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகை 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
  • அரசு பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
  • காவல்துறையை ஏவல் துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டுகிறார். தூத்துக்குடியில் பதிமூன்று பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதை தொலைக்காட்சி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று மெத்தனமாக கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
  • தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அண்ணா மீது ஆணையாகச் சொல்கிறேன், கருணாநிதி மீது ஆணையாகச் சொல்கிறேன், சத்தியமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
  • கடந்த ஏழு மாதத்தில் மூன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்ககை இரும்பு கரம் கொண்டு அகற்றப்படும்.
  • ஒரக்கடத்தில் 150 ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்.
  • 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது இந்த அரசின் கொள்கை.
  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  • ஒரு மாத கால கஞ்சா வேட்டையில் 9 ஆயிரத்து 498 பேர் கைது செய்யப்படுள்ளனர்.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
  • அனைவரும் கட்சி எல்லைகளை கடந்து ஆளுநர் உரையைப் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: ’ 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை’- அமைச்சர் மா. சுப்ரமணியன்

Last Updated :Jan 7, 2022, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.