ETV Bharat / city

ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார் ஸ்டாலின்

author img

By

Published : Sep 2, 2021, 10:01 PM IST

சிறப்பாகப் பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்குகிறார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

சென்னை: குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் நல்லாசிரியர் விருதை தமிழ்நாட்டில் இந்தாண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். ஆண்டுதோறும் ஆசிரியர் நாளன்று நல்லாசிரியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டிற்கு 389 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும் என 342 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணியாற்றும் 33 ஆசிரியர்களுக்கும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் 10 விரிவுரையாளர்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இரண்டு பேர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இவர்களுக்கான பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, காவல் துறையின் மூலம் அவர்கள் மீது வழக்குகள் இருக்கின்றனவா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். சிறப்பாகப் பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கான ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்கமாக மு.க. ஸ்டாலின் சென்னையில் நாளை (செப்டம்பர் 3) ஐந்து ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார்.

மேலும் கரோனா தொற்று காரணமாகவும், ஆசிரியர் நாளன்று விடுமுறை நாள் என்பதால் முன்கூட்டியே வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கல்வித் துறையில் சிலருக்குப் பணி நியமன ஆணைகளையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

இதையும் படிங்க: தீர்ந்தது சிக்கல்; திட்டமிட்டபடி வருகிறார் தலைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.