ETV Bharat / city

14 ஆண்டுகளுக்கு பின் கொலையாளிகளுக்கு கிடைத்த இரட்டை ஆயுள்!

author img

By

Published : Oct 1, 2019, 6:27 AM IST

சென்னை: 14 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

After 14 years court impose two life sentence for accused

கடந்த 2005ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கீழ திருப்பாலக்குடியில் தமிழ்செல்வன் என்பவர், கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். மேலும் கொலையாளிகள் தமிழ்செல்வனின் வலது கையையும் வெட்டி எடுத்துச்சென்றனர். இந்த வழக்கில் பொய்யாமொழி, வழக்கறிஞர் சி.இளங்கோவன், ஆசைதம்பி, செல்வம், அமுதரசன், பத்மாவதி, கயல்விழி, கனிமொழி, ஆர்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

வழக்கில் ஜாமினில் வெளிவந்த பொய்யாமொழி, ஆசைதம்பி, செல்வம் ஆகியோர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர். இதற்கிடையே வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆர். இளங்கோவன் இறந்துவிட்டார். இவர்களைத் தவிர மற்றவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப்பின்னர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி செந்தூர்பாண்டி, வழக்கறிஞர் சி.இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: யார் இந்த தாதா மணி... எவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்டார்?

Intro:Body:திருவாரூரில் கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005 ஆண்டு திருவாரூர் மாவட்டம் கீழ திருப்பாலக்குடியில் தமிழ்செல்வன் என்பவர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தமிழ்செல்வனின் வலது கையை வெட்டி எடுத்து சென்றனர்.

இந்த வழக்கில் பொய்யாமொழி, வழக்கறிஞர் இளங்கோவன், ஆசைதம்பி, செல்வம், அமுதரசன், பத்மாவதி, கயல்விழி, கனிமொழி, மற்றொரு ஆர்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பொய்யாமொழி, ஆசைதம்பி, செல்வம் ஆகியோர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். வழக்கின் போது ஆர். இளங்கோவன் இறந்து விட்டார். மற்றவர்கள் மீது மேற்படி வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டுகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி செந்தூர்பாண்டி, வழக்கறிஞர் சி.இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.