ETV Bharat / business

சரிந்தது தங்கம் விலை!

author img

By

Published : Feb 25, 2020, 10:59 PM IST

நீண்ட நாள்களாக உயர்வை சந்தித்துவந்த தங்கம் விலை இன்று ஒரேநாளில் 10 கிராம் தங்கத்தின் மொத்த விலையிலிருந்து 954 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

Gold Rate
Gold Rate

ஆபரணத் தங்க விலை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்வை சந்தித்துவந்த நிலையில், இன்று ஒரேநாளில் 10 கிராம் தங்கத்தின் மொத்த விலையிலிருந்து 954 ரூபாய் சரிவடைந்துள்ளது. மேலும் நேற்று 10 கிராம் ஆபரணத் தங்கம் 44 ஆயிரத்து 503 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று 43 ஆயிரத்து 549 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது.

மேலும் ஒரு சவரனுக்கு 592 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. ஒருநாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் வரை தங்கம் விலை குறைந்தது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெள்ளி விலை கிலோவிற்கு 80 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிவந்த நிலையில் தற்போது 49 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.