ETV Bharat / business

கோவிட்-19 எதிரொலி : நிறுவனங்களை பாதுகாக்க திவால் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு ரத்து

author img

By

Published : Sep 25, 2020, 1:09 AM IST

கரோனா முடக்கத்தின் காரணமாக பல நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அவற்றைப் பாதுகாக்க திவால் சட்டத்தின் மூன்று பிரிவுகள் மேலும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

insolvency
insolvency

கோவிட் 19 காரணமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக திவால் சட்டத்தின் மூன்று முக்கியப் பிரிவுகள் மேலும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு திவால் சட்டத்தின் 7,9,10 ஆகிய பிரிவுகள் ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இது அடுத்த மூன்று மாதங்களுக்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பொதுமுடக்கத்தால் பல்வேறு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதை அடுத்து அந்நிறுவனங்களை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், அந்நிறுவனங்களின் நிதிநிலை சீராக இந்நடவடிக்கை முக்கியப் பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவிட்-19 பாதிப்பின் காரணமாக சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் விதமாக அந்நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை (ஆறு மாதம்) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்திற்கான வட்டித்தொகை செலுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இதையும் படிங்க: சந்தை நிலவரம்: கடும் சரிவு... 6ஆவது நாளாக தொடரும் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.