ETV Bharat / briefs

'ஆடு வளர்ப்பவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வேண்டும்'

author img

By

Published : Aug 10, 2020, 4:52 PM IST

தென்காசி: தென் மாவட்டங்களில் ஆடுகளைப் பாதுகாக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க கோரி புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tamil Desiyam Party Petition to Collector
Tamil Desiyam Party Petition to Collector

தென் மாவட்டங்களில் ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் ஆடுகளைப் பாதுகாப்பதில் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆலங்குளம் பகுதியில் இரவு நேரத்தில் திருடர்கள் ஆடுகளைத் திருட முயற்சித்ததில் தகராறு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்து இருந்தனர். அந்த மனுவில், "தொடர்ச்சியாக ஆடு வளர்ப்போரிடமிருந்து ஆடுகள் திருடு போவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் ஆடுகளைப் பாதுகாக்க தனியாக இருப்பதால் அவர்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆடு திருட்டு குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆடு வளர்ப்போருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.