ETV Bharat / briefs

சீனப் பொருள்களை இனி வாங்குவதும் இல்லை, விற்பதும் இல்லை - வணிகர்கள் முடிவு

author img

By

Published : Jun 27, 2020, 2:44 PM IST

தஞ்சாவூர்: சீன ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சீனப் பொருள்களை வாங்குவதும் இல்லை, விற்பதும் இல்லை என திருச்சிற்றம்பலம் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

Thiruchitrambalam merchants
Thiruchitrambalam merchants

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது திருச்சிற்றம்பலம். இப்பகுதியிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வணிகரீதியான மையமாக திருச்சிற்றம்பலம் நகர் அமைந்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்கியதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருச்சிற்றம்பலம் பகுதியிலுள்ள மக்கள், வணிகர்கள் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சீன அரசால் தயாரிக்கப்பட்டு வெளிவரும் அனைத்து பொருள்களையும் இனி வாங்குவதும் இல்லை, விற்பதும் இல்லை என்று முடிவெடுத்துள்ளனர். மேலும் இருக்கும் பொருள்களை தீயிட்டு கொளுத்துவது என்றும், முடிவு செய்து தீர்மானம் இயற்றியுள்ளனர். வர்த்தகர்களின் இந்த முடிவுக்கு இப்பகுதியிலுள்ள பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.