ETV Bharat / briefs

கால்பந்து: மெஸ்ஸியின் உதவியால் டிரா செய்த அர்ஜென்டினா

author img

By

Published : Jun 20, 2019, 5:40 PM IST

மெஸ்ஸியின் உதவியால் டிரா செய்த அர்ஜெண்டினா

அர்ஜென்டினா - பாராகுவே அணிகளுக்கு இடையேய நடைபெற்ற லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

அர்ஜென்டினா - பாராகுவே:

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் பி பிரிவில் உள்ள அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் கொலாம்பியாவிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்று தனது இரண்டாவது போட்டியில் பாராகுவே அணியை எதிர்கொண்டது.

பாராகுவே அணியின் ஆதிக்கம்:

முதல் பாதி ஆட்டத்தில் பாராகுவே அணி, பந்தை சக வீரர்களுக்கு பாஸ் செய்து விளையாடுவதில் அர்ஜென்டினாவை விட சிறப்பாக செயல்பட்டது. இதனால், 37ஆவது நிமிடத்தில் பாராகுவே வீரர் ரிச்சர்ட் சான்செஸ் சூப்பரான முறையில் கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் பாராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதி ஆட்டம் முழுவதும் பாராகுவே அணி, ஆதிக்கம் செலுத்தியது.

அர்ஜெண்டினா - பாராகுவே:

ஆகுவேரோவின் எண்ட்ரி:

பின்னர், நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மட்டுமே அர்ஜென்டினா அணி, தாக்குதல் முறையில் ஆடியது. குறிப்பாக, சர்ஜியோ அகுவேரோ மாற்று வீரராக அர்ஜென்டினா அணிக்கு களமிறங்கியுடன், அர்ஜென்டினா அணியின் ஆட்டம் முற்றிலும் மாறியது.

இதைத்தொடர்ந்து, வீடியோ உதவி நடுவர் (வார்) முறையில் அர்ஜென்டினா அணிக்கு 57ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி இதை சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். பின்னர், இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தவறியதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. பொனால்டியைத் தவிர இப்போட்டியில் மெஸ்ஸி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாதது, அர்ஜென்டினா ரசிகர்களை வருத்ததில் ஆழ்த்தியது.

காலிறுதிக்கு முன்னேறுமா அர்ஜென்டினா?

இதன் மூலம் அர்ஜென்டினா அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என ஒரேயொரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. மறுமுனையில், பாராகுவே அணி இரண்டு போட்டிகளையும் டிரா செய்ததால், இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், அர்ஜென்டினா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணியின் கடைசி வாய்ப்பு:

இதைத்தொடர்ந்து, 23ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பாராகுவே அணி, கொலாம்பியா அணியுடனான போட்டியில் தோல்வி அடைய வேண்டும். மேலும், அர்ஜென்டினா அணி கத்தார் அணியுடனான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அர்ஜென்டினா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.

Intro:நாமக்கல் அருகே லாரிகளுக்கு பஞ்சர் பார்க்கும் 43 வயது பெண்


Body:இராணுவம், காவல்,கடற்படை, விமானம் ஓட்டுவது என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்தவர் கண்மணி. இருசக்கர வாகனம் முதல் பேருந்து, லாரி வரையிலான கனரக வாகனங்களுக்கு பஞ்சர்,வெல்டிங், பேருந்து மற்றும் லாரி டயர்களை கழற்றி மாட்டும் வேலைகளை சர்வசாதாரணமாக செய்துவருகிறார்.


நாமக்கல் - சேலம் சாலையில் புதன்சந்தை என்னுமிடத்தில் பஞ்சர் கடையை நடத்தி வந்தவர் வெங்கடாசலம். இவருக்கு கண்மணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெங்கடாசலத்திற்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க இயலவில்லை. இதன்காரணமாக வெங்கடாசலம் மற்றும் கண்மணி தம்பதியர் குடும்பம் வறுமைக்குள்ளானது. அதன்பின் கண்மணி தனது கணவர் செய்து வந்த தொழிலான பஞ்சர் பார்க்கும் தொழிலை மேற்கொள்ள தொடங்கினார். தனது கணவரின் ஆலோசனையுடன் பஞ்சர் கடையை வெற்றிகரமாக நடத்திவருகிறார். இவர் பஞ்சர் பார்ப்பதுமட்டுமின்றி வெல்டிங் வேலையிலும் கைத்தேர்ந்தவர் என்கின்றனர் அக்கப்பக்கத்தினர். "தங்களது வாகனம் திடீரென பஞ்சர் ஆனால் அதுவும் நள்ளிரவு இருந்தாலும் சரி கண்மணி அக்கா முகம்சுழிக்காமல் பஞ்சரை சரிசெய்து தருவார்கள்" எனக்கூறிகின்றனர் லாரி ஓட்டுநர்கள்.

இதுகுறித்து கண்மணியுடன் பேசுகையில் தனக்கு 43 வயதாகிறது. தான் இந்த தொழிலை கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டு வருவதாகவும் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் இந்த தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 24 மணி நேரத்தில் எப்போதும் பஞ்சர் என வந்தாலும் பஞ்சர் ஒட்டி தருவேன்.தினந்தோறும் பஞ்சர் பார்த்து கிடைக்கும் வருவாயை வைத்து தனது இரண்டு மகள்களையும் எம்.இ. மற்றும் எம்.ஏ வரை படிக்கவைத்ததாகவும் தற்போது தனது மகனை படிக்கவைத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இதுவரை யாரிடமும் கடன்பெற்றதே இல்லை தன்னுடைய சொந்த உழைப்பில் மட்டும் ஈட்டிய வருவாயை கொண்டுதான் படிக்க வைத்ததாகவும் கர்வமுடன் கூறுகிறார் கண்மணி. தனது உறவினர்கள் ஆரம்பகாலத்தில் தன்னிடம் எந்த பெண்ணாவது ஆண்கள் செய்யும் வேலையை பார்ப்பார்களா என ஏளனமாக பேசினார்கள். வேலையில் ஆண் வேலை பெண்வேலை என தனியாக எதுவும் கிடையாது. பிடித்ததை செய்தேன். ஆனால் தற்போது எங்களுடைய வளர்ச்சிக்கண்டு பெருமைப்படுகின்றனர் என புன்முறுவலுடன் தெரிவித்தார் கண்மணி.

பொதுவாக பஸ்,லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணியை ஆண்கள் மட்டும் ஈடுபடுவார்கள். ஏனென்றால் சக்கரத்தின் எடை அதிகமாக இருக்கும். அதனை தூக்குவதற்கு நல்ல உடல் வலு வேண்டும். ஆனால் கண்மணி "அதுலாம் ஒன்னும் வேண்டா பா ! மன தைரியம் இருந்த போதும் எதையும் சாதிச்சிடலாம்" என ஆணவத்துடன் தெரிவித்துக்கொண்டு பள்ளி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பஞ்சரை சரிசெய்ய கிளம்பிவிட்டார்.


" வேலைல என்ன ஆம்பிளை வேலை பொம்பள வேலை " என கண்மணி சொன்னது எத்தனை நிஜம்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.