ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

author img

By

Published : Feb 19, 2022, 6:39 AM IST

Updated : Feb 20, 2022, 10:01 AM IST

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் , tamil nadu urban local body election polling live, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர் நேரலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர் நேரலை

19:46 February 19

மறுவாக்குப்பதிவு கோரி அதிமுக மனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

19:02 February 19

மாவட்டங்கள் வாக்குப்பதிவு நிலவரம்

கரூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 74.02% வாக்குகள்பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 53% வாக்குகள் பதிவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.93 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 66.12 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 56 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 63 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

18:27 February 19

சென்னையில் வாக்குப்பதிவு நிலவரம்

தலைநகர் சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் மாலை ஐந்து மணி நிலவரப்படி, 41.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

18:00 February 19

நிறைவுபெற்றது வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் காலை ஏழு மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப். 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

17:23 February 19

வாக்களித்தார் எல் முருகன்

வாக்களித்தார் எல் முருகன்
வாக்களித்தார் எல் முருகன்

கள்ள ஓட்டு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

17:05 February 19

கடைசி ஒரு மணி நேர வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப் பதிவு நேரமான மாலை 5 முதல் 6 வரை, கோவிட் பாதிப்புக்குள்ளானவர்கள், உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16:30 February 19

மத்திய அமைச்சர் எல் முருகன் வாக்கில் குழப்பம்

மத்திய இணையமைச்சரான எல் முருகனின் வாக்கை வேறொரு நபர் அளித்ததாக சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,"மாண்புமிகு அண்ணாமலை அமைச்சரின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?" எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் மாநில தேர்தல் அணையம், அமைச்சர் எல் முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை எனவும், அவர் வாக்களிக்கலாம் எனவும் விளக்கமளித்துள்ளது. வாக்குச்சாவடியில் முருகன் என்ற பெயரில் இருவர் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

16:12 February 19

சென்னையில் வாக்குப்பதிவு நிலவரம்

மதியம் மூன்று மணி நிலவரப்படி சென்னையில் 31.89 விழுக்காடு வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் மதியம் மூன்று மணிவரை 50 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது.

15:51 February 19

3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

காஞ்சிபுரம்-53%

சிவகங்கை-53%

தருமபுரி-66%

மயிலாடுதுறை-52%

கள்ளக்குறிச்சி-61%

திருச்சி-57%

பெரம்பலூர்-55%

15:47 February 19

சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சென்னை தி நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்களித்தனர்.

15:20 February 19

தாம்பரம் மேயர் பதவிக்கு குறிவைக்கும் விசிக

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை விசிக பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசவுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டப் பின் திருமாவளவன் இதை தெரிவித்தார்.

13:39 February 19

ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

  • தாம்பரம் மாநகராட்சி 27.65% வாக்குப்பதிவு
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 30.23% வாக்குப்பதிவு
  • தருமபுரி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 50% வாக்குப்பதிவு
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 47.02% வாக்குப்பதிவு
  • விருதுநகர் மாவட்டத்தில் 44.63% வாக்குப்பதிவு

13:28 February 19

ஜனநாயக கடமையாற்றிய தாம்பரம் காவல் ஆணையர் ரவி

ஜனநாயக கடமையாற்றிய தாம்பரம் காவல் ஆணையர் ரவி

12:59 February 19

டிடிவி தினகரன் வாக்களித்தார்

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்.

12:55 February 19

தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்த தயாநிதி மாறன்

தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார் எம்.பி. தயாநிதி மாறன்

12:43 February 19

வார் ரூமில் முதலமைச்சர் ஸ்டாலின்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றிய விவரங்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமில் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

12:41 February 19

வானதி சீனிவாசன் வாக்களித்தார்

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

12:41 February 19

வாக்களித்தார் நடிகர் டி.ராஜேந்தர்

சென்னை தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் டி.ராஜேந்தர் வாக்களித்தார்.

12:41 February 19

வாக்களித்தார் டிஜிபி சைலேந்திர பாபு

வாக்களித்தார் டிஜிபி சைலேந்திர பாபு.

12:27 February 19

ஜனநாயக கடமையாற்றினார் கமல் ஹாசன்!

ஜனநாயக கடமையாற்றினார் கமல் ஹாசன்
ஜனநாயக கடமையாற்றினார் கமல் ஹாசன்

சென்னை 125 வார்டு தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

12:11 February 19

ஜனநாயக கடமை ஆற்றிய தலைவர்கள்

  • சிதம்பரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.
  • திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்குப்பதிவு செய்தார்.
  • திண்டிவனம் வாக்குச்சாவடியில் பாமக இளைஞரணி தலைவர்,ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை செலுத்தினார்.
  • வாக்களித்தார் சமக தலைவர் சரத்குமார்.

12:09 February 19

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

  • சென்னையில் 11 மணி நிலவரப்படி 17.7 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி மொத்தம் 26.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

12:04 February 19

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாக்களித்தார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாக்களித்தார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாக்களித்தார்

தேனி பெரியகுளம் வாக்குச்சாவடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உடன் வாக்களித்தார்.

11:50 February 19

வாக்களித்த பின் சசிகலா கண்ணீருடன் பேட்டி..

சென்னை தி நகரில் வாக்குச்சாவடியில் வி.கே. சசிகலா வாக்களித்தார்
சென்னை தி நகரில் வாக்குச்சாவடியில் வி.கே. சசிகலா வாக்களித்தார்

சென்னை தி நகரில் வாக்குச்சாவடியில் வி.கே. சசிகலா வாக்களித்தார். அதன் பின், "நான் எப்பொழுதும் என் அக்காவுடன் சேர்ந்து தான் வாக்களித்தேன். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார். இந்த முறையைத்தான் தனியாக வந்துள்ளேன். ஆளுங்கட்சி அராஜகம் செய்யக்கூடாது. நியமாக நடக்க வேண்டும். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

11:44 February 19

பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்

பிரேமலதா விஜயகாந்த் தனது மகனுடன் வாக்களித்தார்
பிரேமலதா விஜயகாந்த் தனது மகனுடன் வாக்களித்தார்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

11:33 February 19

ஜனநாயக கடமையை ஆற்றிய கனிமொழி

திமுக மகளிர் அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. செயிண்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

11:17 February 19

முஸ்லீம் பெண்ணை ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர்: விளக்கம் கேட்ட மாநில தேர்தல் ஆணையர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தற்போது வரை மாநகராட்சி தேர்தலில் 5.78% வாக்குகள், நகராட்சிகளில் 10.32% வாக்குகள், பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவு ஆகியுள்ளது என்றார்.

மேலும், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 8-வார்டில் வாக்கினைப் பதிவு செய்ய வந்த முஸ்லீம் பெண்ணை பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றச் சொன்ன விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

11:14 February 19

உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்

மனைவி கிருத்திகா உடன் வந்து ஜனநாயக கடமையாற்றிய உதயநிதி ஸ்டாலின்
மனைவி கிருத்திகா உடன் வந்து ஜனநாயக கடமையாற்றிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் உடன் வாக்களித்தார்.

11:11 February 19

ஜனநாயக கடமையாற்றிய சினிமா பிரபலங்கள்..

கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து வாக்களித்தார்.

  • சென்னையில் நடிகர் அருண் விஜய் வாக்களித்தார்.
  • சென்னையில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் வாக்களித்தார்.

10:54 February 19

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களநிலவரம்!

வாக்குப்பதிவு நிலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலையொட்டி காலை 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்.

நகராட்சிகள்

  • கள்ளக்குறிச்சி - 9.91 %
  • திருக்கோவிலூர் - 6.08 %
  • உளுந்தூர்பேட்டை - 11.29 %

பேரூராட்சிகள்

  • சங்கராபுரம் - 14.64 %
  • தியாகதுருகம் - 15.55 %
  • சின்னசேலம் - 14.09 %
  • மணலூர்பேட்டை - 21.35 %
  • வடக்கனந்தல் - 14.56 %

மாவட்டத்தின் மொத்த வாக்குப்பதிவு 11.68 சதவீதம்.

10:47 February 19

ஜனநாயக கடமையாற்றிய அமைச்சர்கள்!

மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்களித்தார். விழுப்புரம் செஞ்சி பேரூராட்சி 6-வது வார்டில் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்தார்.

10:40 February 19

பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்

திண்டிவனம் வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்.

10:22 February 19

சென்னை, கோவை வாக்குப்பதிவு நிலவரம்

  • சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 % வாக்குப்பதிவு
  • கோவை மாவட்டம் நகராட்சி பகுதியில் 10%, பேரூராட்சியில் 13.42%, கோவை மாநகராட்சியில் 6.80% வாக்குப்பதிவு

10:12 February 19

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாக்களித்தார்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 197 -வது வார்டு பனையூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் தனது வாக்கினை குடும்பத்தினருடன் வந்து பதிவு செய்தார்.

10:00 February 19

அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்

தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் ஜனநாயக கடமை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!
தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் ஜனநாயக கடமை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேனாம்பேட்டையில் வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டம் ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

09:42 February 19

சீமான் வாக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்

சென்னை மாநகராட்சி (ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வளாகம்) வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

09:33 February 19

ஜனநாயக கடமையை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா உடன் ஆழ்வார்பேட்டை கே.பி தாசன் சாலையிலுள்ள எஸ்ஐடி கல்லூரியில் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

09:31 February 19

வாக்களிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை!

09:21 February 19

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்

சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

09:14 February 19

நடிகை குஷ்பு வாக்களித்தார்

நடிகை குஷ்பு வாக்களித்தார்
நடிகை குஷ்பு வாக்களித்தார்

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சென்னை மந்தைவெளில் 126 வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

09:07 February 19

காட்பாடியில் வாக்களித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

09:01 February 19

கோவையில் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்

கோவை, சுகுணாபுரத்தில் வாக்குச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்.

08:57 February 19

மலைக்கோட்டை மாநகரில் வாக்களித்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார். திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.

08:29 February 19

11 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

08:10 February 19

வாக்களித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

வாக்களித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
வாக்களித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கணவருடன் வந்து வாக்களித்தார்.

08:06 February 19

வாக்களிக்க புறப்பட்டார் ரஜினி!

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய புறப்பட்டார் ரஜினிகாந்த்.

08:01 February 19

திருச்சி மாநகராட்சியில் இயந்திரக் கோளாறு; வாக்குப்பதிவு தாமதம்

திருச்சி மாநகராட்சி 23 வது வட்டத்துக்குட்பட்ட கலைப் பள்ளி மானிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள 281-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்.

07:59 February 19

ககன்தீப்சிங் பேடி குடும்பத்தினருடன் வாக்களித்தார்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி குடும்பத்தினருடன் வாக்களித்தார்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி குடும்பத்தினருடன் வாக்களித்தார்

விருகம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

07:46 February 19

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்களித்தார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை வள்ளுவர் கோட்டம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

07:35 February 19

கருப்பு மாஸ்க் அணிந்து, சிவப்பு நிற காரில் வந்த நடிகர் விஜய்

சிவப்பு நிற காரில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்
சிவப்பு நிற காரில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்

கருப்பு மாஸ்க் அணிந்து, சிவப்பு நிற காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் விஜய்.

07:22 February 19

சிவப்பு நிற காரில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்

கருப்பு மாஸ்க் அணிந்து சிவப்பு நிற காரில் வந்த நடிகர் விஜய் வாக்களித்தார்
கருப்பு மாஸ்க் அணிந்து சிவப்பு நிற காரில் வந்த நடிகர் விஜய் வாக்களித்தார்

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை சிவப்பு நிற காரில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.

07:17 February 19

சிவப்பு நிற காரில் நடிகர் விஜய் வாக்களிக்க வருகை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் நடிகர் விஜய் வருகை...

07:08 February 19

கோவை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 802 பதவிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 802 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 23 லட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர். 2303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

07:03 February 19

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.

06:44 February 19

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட காவலர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்தலில் இரண்டு கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 வரை நடைபெறுகிறது. இதில், மாலை 5 முதல் 6 மணிவரை கரோனா நோயாளிகள் பரிசோதனை சான்றிதழைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

06:19 February 19

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் (பிப்ரவரி 19) நடைபெறும் நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.

Last Updated : Feb 20, 2022, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.