ETV Bharat / bharat

இன்று ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு:  இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!

author img

By

Published : Sep 30, 2021, 7:27 PM IST

Updated : Oct 8, 2021, 6:36 AM IST

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி ஃபிலிம் சிட்டி இன்று (அக்டோபர் 8) மீண்டும் திறக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் கோவிட்-19 பாதுகாப்பு விதிகளுக்குள்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

ராமோஜி ஃபிலிம் சிட்டி
ராமோஜி ஃபிலிம் சிட்டி

ஹைதராபாத்: ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுற்றுலா இன்றுமுதல் மீண்டும் தொடங்குகிறது. உங்கள் ஓய்வுப்பொழுதை இங்கு நீங்கள் பாதுகாப்புடன் களிக்கலாம்.

இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கும் இந்த சினி - மேஜிக் (திரை-மாயாஜாலம்) இடமானது உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் கருப்பொருள் ஈர்ப்பு (தீம்மேட்டிக் அட்ராக்ஷன்), அடுக்கடுக்கான அழகான நீருற்றுகள், கண்ணைக் கவரும் தோட்டங்கள் என மனம் குதூகலிக்கும் சூழல் இருக்கும்.

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி ஃபிலிம் சிட்டி உங்களுக்குப் பிடித்தமான (தீம்மேட்டிக்) அம்சங்களைக் கொண்ட லட்சக்கணக்கான கனவுகளின் நிலமாக உள்ளது.

இங்கு அமைந்திருக்கும் சிலைகள், தொழில்நுட்பங்கள், வசதிகள், கட்டடங்கள் ஆகியவை பன்னாட்டு வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.

நீடித்த சினிமா வசீகரம்

திரைப்படத் தயாரிப்புகளுக்கு ராமோஜி ஃபிலிம் சிட்டி மிகச் சரியான சிறந்த தேர்வாக இருந்துவருகிறது. திரைப்படங்களுக்குத் தேவையான செட் வடிவமைப்பு, தொழில்முறைச் சேவைகள், படப்பிடிப்பின்போது இடையூறு இல்லாத வகையில் உள்கட்டமைப்புகள் எனச் சிறந்த திரைப்படத் தயாரிப்பு அனுபவங்களைக் கொடுக்கிறது. ஒரேநாளில் பல படங்களுக்கான படப்பிடிப்பு வசதிகளும் இங்கே ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.

ராமோஜி ஃபிலிம் சிட்டியைப் பார்வையிட ஆண்டுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் (1.5 மில்லியன்) பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிகின்றனர்.

ராமோஜி ஃபிலிம் சிட்டி பலவகையான பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், தீமேட்டிக் பொழுதுபோக்கு இடங்களுக்கும் புகழ்பெற்றது. அதன் முக்கியமான சில இடங்கள் இதோ...

ராமோஜி ஃபிலிம் சிட்டி

யுரேகா (EUREKA)

யுரேகா - மன்னர்கள் கால கோட்டைகளின் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மாளிகை. இங்கு வருகைதரும் விருந்தினர் பாடல் - நடனம் மூலம் வரவேற்கப்படுகின்றனர்.

இங்குள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, சுவை மிகுந்த உணவகங்கள், மறக்க முடியாத நினைவுகளைத் தரும் கண்ணுக்கு விருந்துபடைக்கும் கடைத்தெருக்கள் விருந்தினர்களை உற்சாகத்துடன் வரவேற்கின்றன.

ஃபண்டுஸ்தான் & போரசுரா (FUNDUSTAN & BORASURA)

இது குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான அனைத்து அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

இங்குள்ள விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளைக் குதூகலப்படுத்தி ஆச்சரியமூட்டும். மேஜிக் இடமான போரசுரா உங்களை மாயாஜாலத்தால் ஈர்த்து பயமுறுத்தும் புதிய அனுபவத்தைத் தரும்.

ராமோஜி மூவி மேஜிக்

ராமோஜி மூவி மேஜிக் திரைப்படம், கற்பனையின் தனித்துவத்தை விளக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரைப்படத் தயாரிப்பின் சிக்கல்கள், சிறப்பு வரைகலைகள் (Special Effects), எடிட்டிங், டப்பிங் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கப்படுகின்றன.

ராமோஜி ஃபிலிம் சிட்டி
ராமோஜி ஃபிலிம் சிட்டி

திரை உலகம் - கற்பனை உலகில் ஒரு அற்புதமான வேடிக்கையான அனுபவத்தைத் தரும். விண்வெளியில் பயணிப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை ராமோஜி விண்வெளி யாத்திரை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.

நாள்தோறும் நேரடி நிகழ்ச்சிகள் (Daily Live Shows)

பல்வேறு வண்ணமயமான நேரடி நிகழ்ச்சிகள் மூலம் ராமோஜி ஃபிலிம் சிட்டி தனது மேஜிக்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது. இதில் முக்கியமானது 'ஸ்பிரிட் ஆஃப் ராமோஜி' - இது நம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைஞர்களின் திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றியது.

'வைல்டு வெஸ்ட் ஸ்டண்ட் ஷோ' - ராமோஜி ஃபிலிம் சிட்டியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றானது. இது 1960-களில் ஹாலிவுட் கௌபாய் திரைப்படங்களை நினைவூட்டும். 'பேக்லைட் ஷோ' - இது சிறந்த அனிமேஷன் கலைஞர்களால் பிரபல கதாபாத்திரங்களை ஒளி நிழலில் நகரவைத்து கதைகளைக் கூறும் நிகழ்ச்சி.

வழிகாட்டப்படும் சுற்றுலா (Guided Tour)

சிறந்த அனுபவம்கொண்ட சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ராமோஜி ஃபிலிம் சிட்டி, சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக்காட்டப்படுகிறது. திரைப்படத் தயாரிப்பு, அற்புதமான தோட்டங்கள், மரங்களடர்ந்த சாலைகள், மனத்தை மகிழ்விக்கும் பூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன.

பட்டாம்பூச்சி பூங்காவில் வண்ணவண்ண பட்டாம் பூச்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கலாம். அதேபோல் போன்சாய் தோட்டத்தில் உள்ள சிறிய மரங்களில் அமர்ந்திருந்து சிறகடிக்கும் பல்வேறு வகையான பறவைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

விங்ஸ் - பறவைப் பூங்கா

விங்ஸ் - பறவைப் பூங்கா உலகம் முழுவதிலுமுள்ள பறவைகள் இருக்கும் இடமாகும்.

  1. நீர்ப்பறவைகள் மண்டலம்
  2. கூண்டுப் பறவைகள் மண்டலம்
  3. ஃப்ரீ - ரேஞ்சர் பறவைகள் மண்டலம்
  4. தீக்கோழி மண்டலம்

என நான்கு மண்டலங்களை இந்தப் பூங்கா உள்ளடக்கியுள்ளது.

சஹாஸ் - ராமோஜி சாகசப் பூங்கா

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள ஆசியாவின் சாகச நிலமான சஹாஸ் சாகசப் பூங்கா அனைத்து வயதினருக்கும் ஒரே இடத்தில் பல்வேறு சாகச நிகழ்வுகளை வழங்குகிறது. இது சாகசப் பிரியர்களுக்குப் பிடித்தமான இடம்.

அட்ரினலின் ட்ரைவ் தவிர, மற்ற அனைத்தும் வேடிக்கை நிறைந்த சாகசப் பொழுதுபோக்காக, குடும்பம், குழுக்கள், பள்ளி / கல்லூரிகள், கார்ப்பரேட் எனப் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த அனுபவங்களைத் தரும்.

அதிரடி சாகசங்கள் நிறைந்த பயணங்களுக்கு சஹாஸ் சிறந்தது. இங்குள்ள சாகச நிகழ்வுகள்:

  • ஹை ரோப் கோர்ஸ்,
  • நெட் கோர்ஸ்,
  • ஏடிவி ரைட்ஸ்,
  • மவுன்ட்டைன் பைக்,
  • பெயிண்ட் பால்,
  • வில் எய்தல் மற்றும் பல...

இங்கு, பன்னாட்டு வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட சாகச நிகழ்வுகள் சாகச அனுபவத்தை மேம்படுத்துவதோடு மிக உயர்ந்த பாதுகாப்பான தரத்தை உறுதிசெய்கின்றன.

ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு
ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு

தங்கும் விடுதி வசதி (HOTEL STAY PACKAGES)

ராமோஜி ஃபிலிம் சிட்டியைச் சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது என்பதால் பயணிகளின் பட்ஜெட்டிற்கு ஏற்ப தங்கும் விடுதி வசதிகள் (ஹோட்டல்களின் ஸ்டே பேக்கேஜ்கள்) உள்ளன.

உயர்தர சொகுசு உணவக விடுதிகள்...

  • சித்தாரா
  • தாரா
  • ஃபார்ம் ஹவுஸ் விடுதி வசுந்தரா வில்லா
  • சாந்திநிகேதன் பட்ஜெட் விடுதி
  • சஹாரா
  • கிரீன்ஸ் இன் சூப்பர் எகனாமி தங்குமிடம்

எனப் பயணிகளின் வசதிக்கேற்ப தங்குமிட வசதிகள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ளன.

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

ராமோஜி ஃபிலிம் சிட்டி முழுவதும் சுகாதாரம், பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், உடல் வெப்பநிலை கண்காணிப்பு, கிருமி நாசினியைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை உறுதிசெய்யப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்குப் பயிற்சிபெற்ற பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை வழங்குவார்கள்.

மேலும் விவரங்களுக்கு ramojifilmcity.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது 1800 120 2999 என்ற இலவச தொலைபேசி அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

Last Updated : Oct 8, 2021, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.