ETV Bharat / bharat

பூரி ஜெகந்நாதர் ஆலயம் திறப்பு- சிலைகளை தொட அனுமதியில்லை!

author img

By

Published : Aug 23, 2021, 8:10 PM IST

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில், மூன்று மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Puri Jagannath Temple
Puri Jagannath Temple

பூரி (ஒடிசா) : உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் கோவிட் பரவல் காரணமாக மூன்று மாதங்கள் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை (ஆக.23) பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாதர் ஆலயம் வாரநாள்கள் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும்.

ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில், “பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “96 மணி நேரத்துக்கு முன்பாக எடுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் எனவும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

தொட்டு வணங்க அனுமதியில்லை

பக்தர்கள் தெர்மல் சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சாமி சிலைகளை தொட்டு வணங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோயில் வளாகத்தில் உள்ள பூ செடிகள், விளக்குகள் உள்ளிட்டவற்றை தொடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சோம்நாத் ஸ்ரீ சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.