ETV Bharat / bharat

கிரைம் சீரியல் பார்த்து கணவரை கொன்ற கொடூர மனைவி கைது

author img

By

Published : Dec 9, 2022, 6:47 PM IST

உத்தரப் பிரதேசத்தில் தனது கணவரின் சொத்தை அடைவதற்காக நிறைய கிரைம் சீரியல்கள் பார்த்து கொலை செய்த மனைவி உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

உத்தரப் பிரதேசம்: கல்யாணப்பூர் ஷிவ்லி பகுதியைச் சேர்ந்த ரிஷப், தனது மனைவி சப்னாவுடன் வசித்து வந்தார். இவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி, தனது நண்பர் மணீஷுடன் சகர்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.

இதில், பலத்த காயமடைந்த அவர், ஸ்வரூப் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் 1ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், டிசம்பர் 3 ஆம் தேதி, ரிஷப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. தொடர்ந்து அவரை எல்எல்ஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வாட்ஸ்அப் சாட் மூலம் கொலையாளி அம்பலம்: தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து காவல் துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு குழு விசாரணை நடத்தியபோது, ​தாக்குதல் நடந்த நாளில் அந்த இடத்தில் பல சந்தேகத்திற்கிடமான செல்போன் எண்கள் செயல்பட்டன. விசாரணையில் அந்த எண் ராஜூ மற்றும் சிட்டு என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

ராஜுவின் அழைப்பு விவரங்களைப் பார்த்தபோது,​ அவர் ரிஷப்பின் மனைவி சப்னாவுடன் அதிகம் பேசுவது தெரிந்தது. இதனால் சப்னா மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அனைவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது ராஜு, சப்னா மற்றும் சிட்டு ஆகியோர் ரிஷப்பை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. தாக்குதலுக்குப் பிறகுதான் ராஜு சப்னாவுக்கு வேலை முடிந்தது என்று செய்தி அனுப்பினார். இருப்பினும், ரிஷப் உயிர் பிழைத்தபோது, ​எல்லோரும் அவருக்கு அதிக மருந்துகளை கொடுத்து (Over dose) ரிஷப்பை மிகவும் நோய்வாய்ப்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது.

சொத்துக்காக கொலை: தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரிஷப்பிற்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், அதனை அபகரிப்பதற்காக திட்டம் போட்டு தனது கணவரை கொலை செய்ததாக சப்னா காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்த கொலையை அரங்கேற்ற நிறைய கிரைம் சீரியல் பார்த்ததாகவும் சப்னா கூறியுள்ளார். தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமி உட்பட இரு பெண்களை சீரழித்த காமுகர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.