ETV Bharat / bharat

ஆன்மிக செக்ஸ் தெரியுமா? ... புத்தம் புது அனுபவம் தரும் கரீஸா செக்ஸ்..

author img

By

Published : Aug 22, 2022, 4:27 PM IST

Updated : Aug 22, 2022, 4:39 PM IST

உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யத்தைக்கொண்டுவர செக்ஸ் கேஜெட்டுகள் மற்றும் ரோல்-பிளேமிங் எனப் பலவழிகள் இருந்தாலும் தாந்திரீக செக்ஸ் அல்லது இன்னும் சிறப்பாக, "கரீஸா" நுட்பம் மூலம் சிறப்பான ஓர் அனுபவத்தைப் பெறலாம்.

Etv Bharatஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவாரஸ்ய படுத்த இதோ ‘கரீசா’ டெக்னிக்ஸ்
Etv Bharatஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவாரஸ்ய படுத்த இதோ ‘கரீசா’ டெக்னிக்ஸ்

டெல்லி: உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தம்பதிகள் வழக்கமான செக்ஸ் வாழ்க்கையை விட வித்தியாசமான, புது அனுபவத்தை வழங்க கூடிய முறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர்களது செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இது குறித்த புத்தகங்களையும் பல படித்து தெரிந்து கொள்கின்றனர். இந்த வரிசையில் தம்பதிகளுக்கிடையேயான உறவை மேலும் இன்பமாக்குவதற்கான தாந்தீரிக செக்ஸ் முறையான ‘கரீசா’ டெக்னிக்ஸ் குறித்து கேள்விபட்டது உண்டோ? இது முன்விளையாட்டு போல வேடிக்கையானதாகவும், விரைவாக விந்து உமிழ்தலை கட்டுபடுத்தவும் உதவுகிறது.

‘கரீசா’என்றால் என்ன?: கரீசா என்பது ஒரு வகையான மென்மையான பாலியல் செயல்பாடு ஆகும். இத்தாலிய வார்த்தையான "கரேஸ்ஸா", அதாவது அரவணைப்பு என்பதிலிருந்து இந்த பெயர் உருவானது. மற்ற வகையான பாலியல் செயல்பாடுகளைப் போல் இல்லாமல், கரீசாவின் நோக்கம் உச்சத்தை அடைவது இல்லை. இம்முறை மூலம் உங்கள் துணையுடன் தளர்வு மற்றும் ஒரு வகையான பிணைப்பை உருவாக்குவது ஆகும்.

கரீசா டெக்னிக்கானது துணையின் உடல் மீதான ஆசையை விட, அவர் மீதான ஆன்மீக அன்பில் அதிக கவனம் செலுத்த வைக்கிது. வழக்கமான முன்விளையாட்டுக்குப் பதிலாக, கரீசாவின் டெக்னிக்கை பின்பற்றலாம். இதில் புன்னகை செய்வது மற்றும் தோலுடன் தோல் தொடர்பு கொள்வது போன்ற சிற்றின்ப பிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். பொதுவாக முதன் முதலில் செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இதில் வழக்கமான உடலுறவில் ஈடுபடுவர்களை விட மெதுவாகவும், பதட்டமானதாகவும் செயல்பாடுகள் இருக்கும். மிகவும் திருப்திகரமான செக்ஸ் அனுபவத்தை உங்கள் துணையுடன் பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா? கரீசா டெக்னிக்கை அதிகம் பயன்படுத்துவதற்கான சில குறிப்புகள் இங்கே:

1.உங்கள் துணையை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்: கரீசா முறை ஒரு இரவு மட்டும் நீங்கள் வைத்திருக்கும் உறவுக்கானது அல்ல. நீண்ட காலமாக உறவில் இருக்கும் நீங்கள் நம்பக்கூடிய ஒருவருடன் நீங்கள் செக்ஸ் மேற்கொள்ளும் போது இது சிறப்பாகச் செயல்படும். அவ்வாறான உறவில் இருவரும் உடலுறவில் ஈடுபடும் போது, கரீசாவின் ​​முழு நிகழ்வும் ஒரு சிகிச்சையாக மாறுகிறது. நம்பகமான துணையுடன் இம்முறை சிறப்பான அனுபவத்தை தரக்கூடியதாகும்.

2. செக்ஸ் மீதான நோக்கங்களை தெளிவுபடுத்த வேண்டும்: உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருந்தால் அதை முயற்சி செய்ய வேண்டும் என கரீசா டெக்னிக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் இணை "ஏன்" இது போன்ற நோக்கங்கள் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் அதை உண்மையாக வெளிப்படுத்தலாம் (அதாவது, அவர்கள் விரும்பும் பாசத்தை அவர்களுக்கு வழங்குங்கள்).

3. உறவுக்கு முன்பே நன்றாக பேசிக் கொள்ளுங்கள் : நீங்கள் ஏன் கரீசா முறையை செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெளிவாக இருங்கள். இதனால் இருவரும் ஒரே மாதிரியான முடிவில் இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல உடலுறவில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கொருவர் உந்துதலை அறிந்து கொள்வது அவசியம், ஏனெனில் இருவரின் நோக்கங்களும் வேறுபட்டிருக்கலாம்.

4. அடிப்படை விதிகளை புரிந்து கொள்ளுங்கள்: உங்கள் உடலில் கிளர்ச்சி தரக்கூடிய பாகங்கள் எது? அங்கு நீங்கள் அதிகமாகத் தொட விரும்புகிறீர்களா அல்லது உங்கள் உடலின் எதாவது குறிப்பிட்ட பகுதியில் நீங்கள் தொடக்கூடாது என்று விரும்புகிறீர்களா? நீங்கள் உச்சக்கட்டத்தை தாமதப்படுத்த விரும்புகிறீர்களா அல்லது நீங்களும் உங்கள் காதலரும் அதை எப்படி செய்வீர்கள்? போன்றவைகளை முன்னதாகவே பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சுமூகமான செக்ஸில் ஈடுபடுவதை உறுதிசெய்ய, அதனை தொடங்குவதற்கு முன் இந்த வகையான சிக்கல்கள் மற்றும் யோசனைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வது சிறந்ததாகும். இல்லையெனில், இந்த அணுகுமுறையால் இயற்கையாகவே உச்சக்கட்டம் ஏற்படும், இது மற்ற பாலியல் நுட்பங்களைப் போலவே அனுக கூடிய ஒன்றாக உள்ளது.

5. குறுகிய நேரத்தில் இருந்து தொடங்குங்கள் : கரீசா என்பது ஆன்மீக உடலுறவின் ஒரு வடிவமாகும், இது பல மணிநேரங்களுக்கு தொடரக்கூடிய நீண்ட உடலுறவு முறையாகும். இருப்பினும் அது எப்போதும் சாத்தியமாக வேண்டியதில்லை. பெரும்பாலான மக்கள் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் உச்சம் எய்து விடும் விரைவான உடலுறவிற்கு பழக்கப்படுகிறார்கள்.கரீசா முறை மூலம் உங்கள் துணையை மென்மையாகவும் நேசிக்கவும், அவர்களின் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மென்மையாக தீண்டவும் செய்கிறது. அடிப்படையில், இப்போது உச்சியை தூண்டும் உடலுறவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டதால், உங்கள் இருவருக்கும் எந்த மாதிரியான தொடுதல் விருப்பமோ அதனைச் செய்யுங்கள்.

6. உச்சத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் : கரீசா இன்னும் உச்சத்திற்கான வழியாக மட்டுமே கருதப்படுகிறதா? உச்சகட்டம் மட்டும் முக்கியமா? குறிப்பாக நீங்கள் முதல் அல்லது இரண்டாவது முறையாக கரீசா முறைய பின்பற்றினால், தற்செயலான உச்சக்கட்டம் எதிர்பாராமல் கிடைக்கும் என்று பாலியல் சிகிச்சையாளர்கள் கூறுகிறார்கள். விந்தை என்னவென்றால், உச்சகட்டம் மற்றும் அதனை அடைவதில் ஏற்படும் விருப்பங்களை சுற்றி அதிக அழுத்தம் இருப்பதால், அவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிங்க:செக்ஸ் சிறக்க ஆறு அற்புத குறிப்புகள்... என்னென்ன தெரியுமா...?

Last Updated :Aug 22, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.