ETV Bharat / bharat

குஷி படத்தால் குஷியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:21 AM IST

Kushi Movie Release: விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ திரைப்படம் இன்று 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பெரும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய், நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

குஷி படத்திற்கு குஷியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா
குஷி படத்திற்கு குஷியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா

ஹைதராபாத்: ரவுடி ஹீரோ என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை குவித்த படம் தான் குஷி. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று (செப்.1) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் 'மகாநதி' படத்திற்கு பின் இந்த இருவரும் இணைந்து நடிக்கும் படமாகும்.

ஷிவ நிர்வாணா இயக்கி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முரளி ஷர்மா, லக்‌ஷ்மி, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது. எதார்த்த கதைப்போக்கை கொண்டு நகரும் படங்களில் ஒன்றாக இப்படம் பாரக்கப்பட்டாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இது உள்ளது.

நேற்று இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டாவின் பதிவு: "என்னால் இதை நம்பவே முடியவில்லை. பெரிய திரையில் நீங்கள் என்னைக் கண்டு ஒரு வருடம் ஆகிவிட்டன. இருப்பினும் அனைத்தும் வேகமாக நடப்பதைப் போல் உள்ளது. இந்த படம் உங்களுக்கு நிச்சயம் மனமகிழ்வை அளிக்கும். உங்கள் முகத்தில் எழும் மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் ‘குஷி’ உங்களுக்காக.. அன்புடன் விஜய் தேவரகொண்டா" எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் பகிர்ந்த வீடியோ காட்சியில், நீச்சல் குளத்தில் ரிலாக்சாக தனது ரசிகர்களுக்கு வணக்கம் கூறி தெலுங்கில் பேசினார். அதில் அவர், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தெரிவித்து, தெலுங்கு மக்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில் இருந்து வெளியேறுவதைக் காண தான் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது” எனக் கூறி மகிழ்ந்தார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், புக் மை ஷோவில் மட்டும் படத்தின் முன்கூட்டிய டிக்கெட் விற்பனையைப் பகிர்ந்தார். மேலும் போஸ்ட் மூலம், 2 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவு விற்பனையில் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டிற்கு முன்பு, படத்தின் மீது ரசிகர்கள் காட்டி வரும் ஈடு இணையற்ற அன்பிற்கு விஜய் தேவரகொண்டா தனது நன்றியை தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் நடிப்பில் முறையே வெளியான லைகர் மற்றும் சாகுந்தலம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது வெளியாகி உள்ள குஷி திரைப்படம் இருவரது திரை வாழ்க்கைக்கும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும் எதிர்ப்பார்பை உருவாக்கி வருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றி - ரஜினிக்கு லாபத்தில் பங்கு கொடுத்த கலாநிதி மாறன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.