ETV Bharat / bharat

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பீகார் ஆசிரியர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:03 PM IST

பீகாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிட்ட தேதியை கண்டறிந்து அதன் கிழமையை கூறுவதில் கணினியை தோற்கடித்து கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வைசாலி : பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்தவர் அபய் குமார். ஆசிரியரான அபய் குமார், கரோனா காலத்தில் தனது வாழ்வில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல்வேறு வகையிலான வரலாற்று தேடுதல்களில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிட்ட தேதியின் கிழமை உள்ளிட்டவகளை கண்டறியும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதன் விளைவாக ஒரு நிமிடத்தில், கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் கூறப்படும் 19 தேதிகளின் கிழமைகளை கூறி சாதனை படைத்து உள்ளார். ஒரு நிமிடத்தில் கணினியை விட அதிவேகமாக கூறி அபய் குமார் சாதனை படைத்து உள்ளார். அபய் குமாரின் இந்த சாதனையை அங்கீகரித்து கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் அந்த அமைப்பு இணைத்து உள்ளது.

இதுதான் அபய் குமாரின் முதல் சாதனையா என்று கேட்டால் அதுதான் இல்லை. தனது முந்தைய சாதனையைத் தான் தற்போது முறியடித்து அபய் குமார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார் என்பது கூடுதல் சுவாரஸ்யத்தக்க தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலி பகுதியைச் சேர்ந்த அபய் குமாருக்கு இரண்டு சகோதர்ரகள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.

ஓரளவு பொருளாதார செழுமை கொண்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தால் அபய் குமாரின் கல்லூரி கனவு நினைத்த இடத்தில் அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்த அபய் குமார், கரோனா காலத்தில் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மேலும், குழந்தைகளின் கல்வி கற்கும் முறையை மேம்படுத்த விரும்புவதாக கூறும் அபய் குமார் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : UPSC Mains Result : யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.