ETV Bharat / bharat

வெங்காயம் விலை கூடும் அபாயம்? வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்!

author img

By

Published : Feb 27, 2023, 2:30 PM IST

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெங்காயம்
வெங்காயம்

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4 ஆயிரத்து 343 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16 புள்ளி 3 சதவீதம் அதிகம் என மத்திய வர்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ இல்லை. வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதிக் கொள்கை தாராளமானது. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அங்கீகாரத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் அரைக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும் பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றுக்கு வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் தடை என்பதிலிருந்து விலக்களித்து தாராளமாக என்று திருத்தப்பட்ட ஏற்றுமதி கொள்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் படிங்க: PM KISAN திட்டத்தின் 13-வது தவணை வெளியீடு? - பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.