ETV Bharat / bharat

Seema Haider: 2008 மும்பை தாக்குதல் ஞாபகமில்லையா...? மும்பை போலீசாருக்கு மர்ம நபர் மிரட்டல்!

author img

By

Published : Jul 13, 2023, 8:56 PM IST

பப்ஜி மூலம் அறிமுகமான காதலனுடன் சேர்ந்த வாழ கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த சீமா ஹைதர் என்ற பெண்ணை, மீண்டும் சொந்த நாட்டிற்கு அனுப்பாவிட்டால் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு தீவிரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Threat
Threat

மும்பை : பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த சீமா ஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கே திரும்பாவிட்டால், 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என காவல் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்பவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், பப்ஜி கேம் விளையாட்டு மூலம் பழக்கமான உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற இளைஞர் மீது காதல்வயப்பட்டதாக கூறப்படுகிறது. சச்சினை பிரிய மனமில்லாத சீமா ஹைதர், பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படுகிறது.

சச்சினை சந்தித்த சீமா ஹைதர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதரை கைது செய்த பாதுகாப்பு படையினர் அதற்கு உதவியதாக சச்சினை கைது செய்தனர். இருப்பினும் கடந்த 7ஆம் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சீமா ஹைதரிடம் பல நாடுகளின் பாஸ்போர் இருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து உளவு பணிக்காக இந்தியா வந்திருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக சீமா ஹைதர் மற்றும் சச்சினை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் பாதுகாப்பு படையினர் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீமா ஹைதர் மீண்டும் சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் ஹைதர் சீமாவை சொந்த நாட்டிடம் ஒப்படைக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை. 12) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் சீமா ஹைதரை மீண்டும் பாகிஸ்தான் நாட்டுக்கு திருப்பி அனுப்பாவிட்டால், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு தீவிரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் அழைப்பு குறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்... தொகுதி பங்கீடு, தேசிய அளவில் போராட்டம் குறித்து ஆலோசனை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.