ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடங்கள் ரூ.23,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் - அஜஸ் பட்

author img

By

Published : Dec 12, 2022, 4:58 PM IST

உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பாதுகாப்பு வழித்தடங்கள் ரூ.23,000 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை இணை அமைச்சர்  அஜய் பட்
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட்

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் இன்று (டிசம்பர் 12 ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இந்த பதிலில், விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் கிடையாது. ஏற்கனவே, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 2 பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட உள்ளன. உத்தரப்பிரதேசப் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்திற்காக (UPDIC) 12,139 கோடி ரூபாய் முதலீட்டில் 105 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.2,422 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,608 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக (TNDIC) ரூ.11,794 கோடி முதலீட்டில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. இதற்காக ரூ.3,847 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 910 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.