ETV Bharat / bharat

கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா: குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கிய சபாநாயகர்

author img

By

Published : Jul 31, 2021, 1:32 PM IST

டெல்லி: சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட இருப்பதால், குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பிதழ் வழங்கினார்.

கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா
TN Speaker invites president for Assembly centenary fete

கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை திறக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் விழாவில், கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளார். அவருக்கு அழைப்பு விடுப்பதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று (ஜூலை31) டெல்லி விரைந்தார்.

குடியரசு தலைவரை இன்று நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா அழைப்பிதழை அவரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் கலைஞர் கருணாநிதி பல்லூடக ஆராய்ச்சி மையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.