ETV Bharat / bharat

அமலாக்கத்துறை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு!

author img

By

Published : Jul 18, 2023, 1:49 PM IST

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, நிஷா பானு அமர்வு அமா்வு, மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டாா்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது, மேகலா தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும், அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

இதையும் படிங்க: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு; அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

இதையடுத்து நீதிபதி சி.வி.காா்த்திகேயன் பிறப்பித்த தீா்ப்பில், "செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியும் சட்டத்திற்கு உட்பட்டவர். இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவா்த்தியின் தீா்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன்" என தீர்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி, சிகிச்சை முடிவடைந்த நேற்று மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Delhi NDA meet: டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் - 38 கட்சிகள் பங்கேற்பு!

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்தால், அதில் உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் முகேஷ் குமார் மரோரியா கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bengaluru opposition meeting: இன்றைய எதிர்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்க உள்ள 6 முக்கிய விஷயங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.