ETV Bharat / bharat

மாநிலங்களவையில் மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்... இதுவரை எத்தனை பேர் தெரியுமா..?

author img

By

Published : Jul 28, 2022, 12:52 PM IST

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரு அவைகளிலும் இதுவரை 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

three-more-rajya-sabha-mps-including-aap-mp-sushil-kumar-gupta-suspended-for-the-remainder-of-this-week
three-more-rajya-sabha-mps-including-aap-mp-sushil-kumar-gupta-suspended-for-the-remainder-of-this-week

டெல்லி: நாடாளுமன்றத்தில் மூன்று நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் வேண்டுகோளை கேட்காமல் பேராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 4 பேரும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நேற்று (ஜூலை 27) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 19 பேர், இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், எம்பிக்கள் கனிமொழி, என்விஎன் சோமு, எம்.எச். அப்துல்லா, கல்யாணசுந்தரம், கிரிராஜன், என்.ஆர் இளங்கோ, சண்முகம் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 28) மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பிக்கள் சுஷில் கி.ஆர் குப்தா, சந்தீப் கி.ஆர்.பதக், சுயேச்சை எம்.பி அஜித் குமார் புயான் மூவரும் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 23 மாநிலங்கலவை உறுப்பிர்கள், 4 மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.