ETV Bharat / bharat

Teddy Day 2023: காதலர் தின வாரத்தின் 'டெடி டே' ஸ்பெஷல் என்ன?

author img

By

Published : Feb 10, 2023, 10:51 AM IST

ஒவ்வொரு காதல் ஜோடியும் காதலர் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தம்பதிகள் தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தும் வகையில் வாரத்தின் நான்காம் நாள் 'டெடி டே' கொண்டாப்படுகிறது. இந்த நாளை சிறப்பாகவும், மறக்க முடியாததாகவும் மாற்ற 'டெடி டே' (Teddy Day)பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

காதலர் தினம் 2023
காதலர் தினம் 2023

ஹைதராபாத்: பிப்ரவரி மாதம் பிறந்தாலே இளைஞர்கள் மனது சிறகடிக்கும் பட்டாம் பூச்சி போலத் தான் சுற்றித் திரியும். வேலன்டைன்ஸ் டே(valentine's டே) பிப்ரவரி 7ல் தொடங்கி 14 வரை களைகட்டும். அதாவது பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாகத் தான் இருக்கும். ரோஸ் டே, பிரப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே கடைசியில் வேலன்டைன்ஸ் டே என ஒவ்வொரு நாளும் ஒரு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி கடைக்காரர்களும் அதிக வசூல் காரணமாக ஆனந்தத்தில் இருப்பார்கள்.

தற்போது ரோஸ் டே, பிரப்போஸ் டே அந்த வரிசையில் (பிப். 10) நான்காம் நாளான இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் முழுவதும், தம்பதிகள் தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தும் வகையில் ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே என்று சிறப்பாகக் கொண்டாடினர், இன்று டெடி டே. பெண்களுக்கு பிடித்தமான ஒன்றில் இந்த டெடியும் இணையும். இந்த கரடி பொம்மையைக் கரடி எனக் கூறினால் கூட பெண்களுக்கு கோபம் வரும். அந்த அளவிற்கு அவர்களுக்கு இதன் மேல் அவ்வளவு ஈடுபாடு. தற்போது உள்ள தலைமுறைகள் தூங்கும் போது காற்றாடி இல்லாமல் கூட தூங்கிவிடுவார்கள் டெடி இல்லாமல் தூங்குவது இல்லை. அப்படி என்ன தான் இருக்கும் என்று தெரியவில்லை.

உங்கள் இதயத்திற்கு பிடித்தமான தோழிக்கு அவர்களுக்கு பிடித்தமான டெடியை கொடுத்து மகிழ்விக்கும் விதமாக இந்த நாளை கொண்டாடுங்கள். டெடி என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பரிசு. தனது மனதில் உள்ளதை மறை முகமாகக் கூற இதை பயன்படுத்தி கொள்ளலாம். இது பல வண்ணங்களில் பல விதமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது உங்கள் அன்புக்குரியவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க போதுமானது. நீங்கள் உங்கள் துணைக்குக் கரடி பொம்மையை பரிசளிக்க திட்டமிட்டிருந்தால், இந்த சிறப்பு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...

டெடி டே ஸ்பெஷல்!
டெடி டே ஸ்பெஷல்!

பெண்கள் அனைவரும் அதிகமாக விரும்பும் சிவப்பு நிற டெடி பியரை பரிசளிக்கவும். அதிலும் இரட்டை வடிவிலான இதயத்தைக் கொண்டுள்ள டெடியை அவர்களுக்குப் பரிசளியுங்கள். அது இருவருக்குமிடையேயான அன்பையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். தற்போது இது போன்ற இரட்டை வடிவ இதயம் கொண்ட டெடி சந்தை விற்பனையில் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது.

காதலர் தின வாரத்தின் 4-ம் நாள் டெடி டே ஸ்பெஷல்!
காதலர் தின வாரத்தின் 4-ம் நாள் டெடி டே ஸ்பெஷல்!

பின்னர் உங்கள் பரிசுடன் ஒரு காகிதத்தில் உங்கள் மனதில் உள்ள அன்பை எழுதி அதனோடு இணைத்துக் கொடுங்கள். சிறப்பாக இருக்கும் இந்த காதலர் வாரத்தில் உங்களுடைய இந்த பரிசுடன் கூடிய கடிதம் அவர்களைத் தனித்துவமாகவும், சிறப்பானதாகவும் உணர வைக்கும். அதுமட்டுமின்றி, பரிசு கடைகளில் விதவிதமான கண்ணைக் கவரக் கூடிய பலவித வண்ணமையமான பரிசுகளும் இருக்கும்.

மேலும், இந்த நாளை உங்கள் துணையுடன் சிறப்பாகக் கொண்டாட டெடியுடன் ஒரு பூங்கொத்தையும் பரிசாக அளியுங்கள். இந்த பரிசுகள் அனைத்தும் உங்கள் இருவரையும் முற்றிலும் மாறுபட்டதாக உணரவைக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்க்க வேண்டுமென்றால், பல்வேறு வகையான வண்ணமயமான பூக்களைக் கொண்ட பூங்கொத்தை டெடியும் சேர்த்து பரிசளிக்கவும். பூங்கொத்துகளில் இயற்கையான மலர்களைப் பயன்படுத்துவது அதிக பலனைத் தருகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் அரிய வகை ஒளிரும் கல்.. விற்க முயன்ற 2 நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.