ETV Bharat / bharat

முதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை

author img

By

Published : Aug 26, 2022, 10:26 AM IST

இந்தியாவில் முதன் முறையாக டெல்லி உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Etv Bharatமுதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை
Etv Bharatமுதல்முறையாக நேரடி ஒளிபரப்பாகும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை

டெல்லி:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன்(ஆகஸ்ட் 26) ஓய்வு பெறும் நிலையில், அவர் இறுதியாக விசாரிக்கும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நேரடி ஒளிபரப்பிற்கு ஒப்புதல் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

உச்ச நீதிமன்றத்தின் வழக்கப்படி ஓய்வு பெறும் இந்திய தலைமை நீதிபதி அவரது கடைசி வேலை நாளில் அடுத்து பதவியேற்க இருக்கும் இந்திய தலைமை நீதிபதியுடன் பெஞ்சை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனடிப்படையில் இன்று மற்றொரு தலைமை நீதிபதி யுயு லலித்துடன் இணைந்து வழக்கை விசாரிக்க உள்ளார். மேலும் இன்று என்வி ரமணாவிற்கு மற்ற பெஞ்ச் உறுப்பினர்கள் பிரியாவிடை அளிக்க உள்ளனர்.

முன்னதாக செப்டம்பர் 26, 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதித்தது. இதில் பாலியல் குற்றங்கள் மற்றும் திருமண தகராறுகள் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களைத் தவிர மற்ற வழக்கு விசாரணையை தேவை இருந்தால் நேரடி ஒளிபரப்பலாம் என தெரிவித்து இருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நேரடி ஒளிபரப்பு நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அந்த நேரலை ஒளிபரப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க:ஐஎம்எஃப் இந்திய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.