ETV Bharat / bharat

நாடாளுமன்ற மழைக் கால கூட்டம்... காங்கிரஸ் வியூகம் என்ன? சோனியா தலைமையில் ஆலோசனை!

author img

By

Published : Jul 1, 2023, 4:22 PM IST

நாடாளுமன்ற மழைக் கால தொடரில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்து மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனா ஊடுருவல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மழைக் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Congress
Congress

டெல்லி : நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து முத்த தலைவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டம், சீனாவின் ஊடுருவல், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் சோனிய காந்தி வியூகம் வகுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். மொத்த உள்ள 23 நாட்களில் 17 அமர்வுகளாக நாடாளுமன்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினர். நடப்பு கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து சோனியா காந்தி வியூகம் வகுத்ததாக கூறப்பட்டு உள்ளது.

பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனாவின் ஊடுருவல்கள், விலைவாசி உயர்வு, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு அமைப்பதில் இழுபறி, அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற மழைக் காலத் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்தும், காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்தும் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மற்ற்றும் மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், பா. சிதம்பரம், பிரமோத் திவாரி, கே. சுரேஷ், மாணிகம் தாகூர் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான வியூகம் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசை எதிர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். எதிர்வரும் தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூன் 28ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இரண்டு வெவ்வேறு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை இயக்க முடியாது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ல் தொடக்கம்... பொது சிவில் சட்ட மசோதா தாக்கலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.