ETV Bharat / bharat

லிவிங் டூ கெதர் பயங்கரம்: காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட காதலன்

author img

By

Published : Nov 15, 2022, 12:28 PM IST

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் அவரது லிவிங் டூ கெதர் காதலியை கொன்றார். இந்நிலையில் காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு காதலன் அழைத்து செல்லப்பட்டார்.

லிவிங் டூ கெதர் பயங்கரம்
லிவிங் டூ கெதர் பயங்கரம்

டெல்லி: டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, நகரின் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திய இளைஞரை காவல் துறையினர் நவம்பவர் 12 ஆம் தேதி கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட அஃப்தாப் அமீனிற்கும் அவரது காதலி ஷ்ரதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் அஃப்தாப், ஷ்ரதாவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் ஷ்ரதாவின் உடலை 35 கூறுகளாக வெட்டி, டெல்லியில் வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக நவம்பர் 7 அன்று ஷ்ரதாவின் பெற்றோர் மெஹ்ராலி காவல் நிலையத்தில் அவர்களது மகளைக் காணவில்லை என புகார் அளித்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.

இதுகுறித்து அஃப்தாப் காவல் துறையினரிடம், மே 18 அன்று திருமணம் தொடர்பாக அஃப்தாப் அவரது காதலியுடன் சண்டையிட்டதாகவும், வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் ஷ்ரதாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

அஃப்தாப்பும், ஷ்ரதாவும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளனர். சமீபத்தில் ஷ்ரதா திருமணம் செய்யக்கோரி அஃப்தாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அஃப்தாப் காதலியை கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காதலி ஷ்ரதாவின் பாகங்களை மீட்க காட்டிற்கு காதலன் அஃப்தாப் அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: 35 துண்டுகளான லிவிங் டூகெதர் காதலி; அமெரிக்கன் க்ரைம் தொடர் போல் திட்டம் தீட்டிய காதலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.