ETV Bharat / bharat

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: மைக்கேல் ஜேம்ஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

author img

By

Published : Dec 2, 2022, 7:39 PM IST

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SC adjourns bail plea of Michel James in AugustaWestland scam till Tuesday
SC adjourns bail plea of Michel James in AugustaWestland scam till Tuesday

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே பல முறை ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 2) நடக்கவிருந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் அதிகமாக உள்ளதால், கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் வழக்கு விசாரணை டிசம்பர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் ஆட்சியின் போது விவிஜபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் பண மோசடி நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. அந்த புகார்களை தொடர்ந்து ஒப்பந்தம் 2014ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் பணம் பெற்றதாக இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தம்பி அனுப்பிய ரூ.500 மணி ஆர்டர்... ஷாக்கான அக்கா... நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.