ETV Bharat / bharat

நியூயார்க் 41வது இந்திய தின விழாவில் நடிகை சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள்!

author img

By

Published : Aug 21, 2023, 12:23 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 41வது இந்திய தின விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். நியூயார்க் வீதிகளில் நடிகை சமந்த வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நியூயார்க்கில் நடந்த 41 வது இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சி: நடிகை சமந்தா பங்கேற்பு!
நியூயார்க்கில் நடந்த 41 வது இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சி: நடிகை சமந்தா பங்கேற்பு!

ஹைதராபாத்: நியூயார்க்கில் நடைபெற்ற 41வது இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை சமந்தா அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த விழாவில் பேசிய நடிகை சமந்தா, 'ஜெய் ஹிந்த்' என ஆரம்பித்தார். தொடர்ந்து இந்திய நாட்டின் சிறந்த கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்து அவர் பேசினார்.

தென் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, இந்திய தின நிகழ்ச்சியில் ரசிகர்கள் தனது திரைப்படங்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள தனது குஷி படத்தை காணுமாறு அவர் வலியுறுத்தினார்.

சமந்தா நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள குஷி திரைபடம், திரையில் வெளியிட தயாராகி வருகிறது. இவர் இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இப்படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் அவர் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் இயக்குநர் பாலாதான் காரணம் - ஜி.வி பிரகாஷ் குமார் பெருமிதம்!

நியூயார்க்கில் நடைபெறும் 41 ஆவது இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை சம்ந்தா அழைக்கப்பட்டுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா, நியூயார்க்கின் வீதிகளில் வளம் வந்தார். அணிவகுப்பின்போது, அவர் அங்குள்ள மக்களுக்கு கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இந்தியா சார்பாக இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டதில் பெருமை அடைவதாக தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எவ்வளவு அழகானது என்பதை மக்கள் தனக்கு உணர்த்தி உள்ளதாகவும் இந்திய தின அழகான காட்சியை இன்று தனக்கு காண்பித்ததற்கு நன்றி. இதை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

மேலும், ரசிகர்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி என்றும் தனது ஒவ்வொரு படத்தையும் அவர்களது சொந்த படம் போல் ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கும் நன்றி என்று தெரிவித்தார். செப்டம்பர் 1 ஆம் தேதி அனைவரும் குஷி படத்தைப் பாருங்கள் என்றும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்றும் நடிகை சமந்தா தெரிவித்தார்.

இதையும் படிங்க: Rajinikanth in Ayodhya: அயோத்தியில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.