ETV Bharat / bharat

ராஜஸ்தானை கைப்பற்றுமா பாஜக? ஆட்சியை தக்கவைக்குமா காங்கிரஸ்? கருத்து கணிப்புகள் என்ன சொல்கிறது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 6:57 PM IST

Updated : Nov 30, 2023, 9:32 PM IST

Rajasthan Election Exit Poll Results 2023: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், ராஜஸ்தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

ஜெய்ப்பூர் : 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.

ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டியே. ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராஜேந்திர சிங் ரத்தோர் தலைமையிலான பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.

ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 101) :

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN1117414
janki Baat100 -12262 - 8514 - 15
TV990 - 100100 - 11005 - 15
NDTV100 - 12262 - 8514 - 15
ETG108 - 12856 - 7213 - 21
Axis my India80 - 10086 - 106----

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் பாஜகவுக்கு சற்று ஏறுமுகமாக காணப்படுகிறது. அதேநேரம், கருத்து கணிப்புகளை உடைத்து காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். பெரும்பான்மைக்கு 101 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஆட்சிக் கட்டிலை காங்கிரஸ் அலங்கரிக்குமா அல்லது பாஜக தட்டிப் பறிக்குமா என்பது டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

இதையும் படிங்க : ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

Last Updated :Nov 30, 2023, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.