ETV Bharat / bharat

பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?

author img

By

Published : Jul 12, 2023, 4:44 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 மக்களவை தேர்தல்களை கைப்பற்றுவது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேஷ் தர்மணி தெரிவித்து உள்ளார்.

Rahul
Rahul

டெல்லி : அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், உத்தரகாண்டில் காங்கிரசின் நிலைப்பாடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் மாநில வாக்காளர்களை பொது சிவில் சட்டம் மூலம் பிரிவினைப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும், மக்களை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை எதிர்த்து போராடுவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசிக்க உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜேஷ் தர்மணி தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், உத்தரகாண்டில் உள்ள 5 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி இணைந்து பணியாற்று மாறும், தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேஷ் தர்மணி, அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை (ஜூலை. 13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், பொது சிவில் சட்டம் மூலம் மாநில வாக்காளர்களை பாஜக பிரிவினைப்படுத்தி வருவதாகவும், மக்களை பிளவுபடுத்த தவறான பரப்புரைகளை செய்து வருவதாகவும் ராஜேஷ் தர்மணி குற்றஞ்சாட்டி உள்ளார். மாநிலத்தில் பொது சிவில் சட்ட தீர்மானத்தை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும், ஆனால் சட்டம் மத்திய அரசு பிரச்சினை மட்டும் அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்றும், அவர் கூறினார்.

சிக்கலான சட்ட செயல்முறைகளை பற்றி அறியாத சாதாரண மக்களை பாஜக தவறான முறையில் வழி நடத்தி வருவதாகவும், மக்களவை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டத்தை எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்த்து போராடுவது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் ராஜேஷ் தர்மணி தெரிவித்தார்.

மாநிலத்தில் மூத்த தலைவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு தலா ஒரு மக்களவை தொகுதி பொறுப்பை வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாநில அளவில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும் ராஜேஷ் தர்மணி கூறினார்.

இதையும் படிங்க : West Bengal Election result : திரிணாமுல் காங்கிரஸ் அமோகம்! விரட்டியடிக்கும் பாஜக! காங். நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.