ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் மீதான 68% வரியை மத்திய அரசு எடுத்து கொள்கிறது - ராகுல் காந்தி

author img

By

Published : Apr 28, 2022, 8:05 PM IST

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி விமர்சனம் செய்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி நேற்று (ஏப்.27) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கடந்த நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இருந்தபோதிலும் பல மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை. மத்திய அரசின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் நலனுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

  • High Fuel prices - blame states
    Coal shortage - blame states
    Oxygen shortage - blame states

    68% of all fuel taxes are taken by the centre. Yet, the PM abdicates responsibility.

    Modi’s Federalism is not cooperative. It’s coercive.

    — Rahul Gandhi (@RahulGandhi) April 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதற்கு விமர்சனம் செய்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான 68% வரியை மத்திய அரசு எடுத்து கொள்ளும் நிலையில், விலையேற்றத்திற்கு மாநில அரசுகள் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என அனைத்திற்கும் மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்டு பிரதமர் தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார். மோடியின் கூட்டாட்சி முறை ஒத்துழைப்பை நல்கவில்லை மாறாக கட்டாயப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.