ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!

author img

By

Published : Jun 6, 2023, 10:37 AM IST

குடியரசுத் தலைவராக பதவியேற்றபின் முதல் முறையாக சுரினாம் நாட்டிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Murmu
Murmu

பராமரிபோ : சுரினாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு முதல் முறையாக திரவுபதி முர்மு செல்கிறார்.

விமானம் மூலம் சுரினாம் நாட்டின் தலைநகர் பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்றார். விமான நிலையத்தில் திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்றார்.

இந்நிலையில், சுரினாம் நாட்டின் உயரிய விருது குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் என்ற விருதை அந்நாட்டு அதிபர் சந்திரகாபெர்சாத் சாந்தோகி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக் கொண்ட திரவுபதி முர்மு, இந்த மரியாதை தனக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாக கூறினார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "சுரினாமின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் என்ற விருதை பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விருதை இந்திய - சுரினாமியர் சமூகத்தின் தொடர்ச்சியான தலைமுறைகளுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

"இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய இந்திய - சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இந்த கவுரவத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை, நல்லுறவு பேணுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா - சுரினாம் இடையே விவசாயம், விஞ்ஞானம், சுகாதாரம் கட்டிட திறன் உள்ளிட்ட துறைகளில் 4 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் சுரினாம் அதிபர் சந்தோகி ஆகியோர் பிரதிநிதிகள் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைய தொடர்ந்து இந்தியா - சுரினாம் ஆகிய நாடுகளுக்கு இடையே விவசாயம், சுகாதாரம், உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சுரினாமுக்கு இந்தியர்கள் சென்று 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் நாளில், குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதல் முறையாக அரசு முறை பயணமாக சுரினாம் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக திரவுபதி முர்மு கூறியதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Odisha Train Accident : உயிரிழந்தவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல்! திணறும் அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.