ETV Bharat / bharat

நாடாளுமன்ற தாக்குதல் எதிரொலி: புதுச்சேரி சட்டபேரவையில் குவிந்த போலீஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 7:52 PM IST

Puducherry Assembly: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நேற்றைய(டிச.13) கூட்டத்தில், இளைஞர்கள் இருவரின் அத்துமீறலை தொடர்ந்து புதுச்சேரியில் சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி சட்டபேரவையில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி சட்டபேரவையில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி சட்டபேரவையில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: டெல்லி லோக்சபா கூட்டத்தில் நேற்று(டிச.13) அவைக்குள் புகுந்து இரு வாலிபர்கள் புகையை கக்கும் குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டதையடுத்து, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய கூட்டத்தொடரில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பார்வையாளர் மடத்தில் இருந்த இருவர் அவைக்குள் தாக்குதலில் ஈடுபட்டனர். முன்னதாக 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திம் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர், வழக்கம் போல் அவை விவாதத்திற்கு கூடியது. அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் எம்.பிக்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மீது தாவி குதித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் அவைக்குள் எரிந்த கருவியில் இருந்து வெளியேறிய புகையினால், அவையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், அவையில் இருந்த எம்.பிக்கள் இருவரையும் பிடித்து நாடாளுமன்ற பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரத்திற்கு அவை ஒத்தி வைக்கப்பட்டு, பதற்ற சூழல் தணிந்தப்பின் மீண்டும் துவங்கியது. அப்போது பேசிய சபாநாயகர், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவையில் பரவிய புகை நச்சுத்தன்மையற்றது என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து, இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்திற்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்படும் எம்.பிகளை அவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தன்யா தலைமையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதிசிங் மற்றும் போலீசார் சட்டப்பேரவை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை மேற்கொண்டனர். சட்டப்பேரவையில் பாதுகாப்பு கட்டுபாடுகளை அதிகரித்துள்ள நிலையில், சட்டசபை முகப்பு மற்றும் பின் பகுதி வாசல்கள் வழியாக வருவோர் அடையாள அட்டை சோதிக்கப்பட்ட பின்னரே சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கொண்டு வரும் பேக் மற்றும் அனைத்தையும் முழுமையாக சோதனை செய்து பின்னரே சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.