ETV Bharat / bharat

"இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய்" - ராகுல் காந்தி!

author img

By

Published : Aug 20, 2023, 1:53 PM IST

PM's claim on China - Rahul Gandhi clarifies: காஷ்மீர் மாநிலத்தில் அண்டை நாடான சீனாவின் ஆக்கிரமிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி, பொய் உரைப்பதாக, ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய் - ராகுல் காந்தி!
இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய் - ராகுல் காந்தி!

லடாக்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, லடாக் யூனியன் பிரதேசப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தியாவின் நிலப்பரப்பு பகுதிகளில், அண்டை நாடான சீனாவின் ஆக்கிரமிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்திய நாட்டிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி, பொய் உரைத்து வருவதாக, ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் விழா, இன்று (ஆகஸ்ட் . 20) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் டிசோ ஏரிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, "சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ள நிலையில், பிரதமர் மோடி, இந்திய நாட்டிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்ற மாபெரும் பொய்யை தொடர்ந்து உரைத்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் நடைமுறையில் இருந்து வந்த 370வது சட்டப்பிரிவை, 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியதை அடுத்து, லடாக் பகுதிக்கு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. லடாக்கிற்கு யூனியன் அந்தஸ்து வழங்கப்பட்ட நிகழ்வை, அப்பகுதி மக்களே விரும்பவில்லை.

இதுதொடர்பாக, புகார்கள் அப்பகுதி மக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. லடாக் மக்கள், தங்கள் மாநிலத்தை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அதிகாரத்தால் அல்ல. இங்கு வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது" என ராகுல் தெரிவித்தார்.

பாங்கோங் டிசோ ஏரி தொடர்பான, ராஜீவ் காந்தியின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ராகுல், தனது தந்தை இந்த பகுதியில் இதற்கு முன் வந்த போது எடுத்த போட்டோக்களை தன்னிடம் காட்டி, இந்த பூமியின் மிக அழகான இடம் தான் இந்த பாங்கோங் ஏரி என்று கூறியதாக நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் தான் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையின் போது லடாக் வர திட்டமிட்டு இருந்தேன் என்றும் ஆனால், சிலர் என் லடாக் பயணத்தை திட்டமிட்டு தடுத்து விட்டதாகவும் ராகுல் காந்தி தெரித்தார். இப்போது அனைத்து தடைகளையும், சூழ்ச்சிகளையும் தாண்டி இங்கு வந்து உள்ளேன் என்றும் கார்கில் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி பிறந்த நாள் - ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.