ETV Bharat / bharat

கொச்சி- மங்களூரு குழாய் வழி கியாஸ் விநியோகம்: பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்

author img

By

Published : Jan 5, 2021, 7:39 AM IST

டெல்லி: கொச்சியிலிருந்து மங்களூருக்கு குழாய் வழி எரிவாயு விநியோக திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.5) தொடங்கிவைக்கிறார்.

PM Modi
PM Modi

கொச்சியிலிருந்து மங்களூருக்கு 450 கி.மீ. குழாய் வழி எரிவாயு விநியோகத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 5) காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

இதன் மூலம், வீடுகளுக்கு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, செலவு குறைந்த குழாய் வழி இயற்கை எரிவாயுவும், போக்குவரத்துத் துறைக்கு அழுத்தப்பட்ட இயற்கை வாயுவும் விநியோகிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த குழாய் அமைப்பு கேரளாவில் மாநிலம் கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களை கடந்து சென்று கர்நாடகாவின் மங்களூரை அடைகிறது.

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்,450 கிலோ மீட்டார் நீளமுள்ள இந்த குழாய் திட்டப் பணிகளை கெயில் இந்தியா நிறுவனம் முடித்துள்ளது. ஒரு நாடு, ஒரு கியாஸ் விநியோக அமைப்பு’ நோக்கத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.