ETV Bharat / bharat

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்கு பிரதமர் மோடி மரியாதை

author img

By

Published : Nov 7, 2022, 4:33 PM IST

தமிழ் எழுத்தாளர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்கு பிரதமர் மரியாதை
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்கு பிரதமர் மரியாதை

டெல்லி: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் நூறாவது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது சிறந்த எழுத்து மற்றும் கவிதைகளுக்காக மட்டுமல்லாமல், வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை குழந்தைகளிடையே பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது முயற்சிகள் இன்றைய காலத்திலும் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் அழ. வள்ளியப்பா 1922ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி புதுக்கோட்டை அருகே உள்ள ராயவரத்தில் பிறந்தார். இவரது எழுத்தில் 1944ஆம் ஆண்டு 'மலரும் உள்ளம்' என்னும் முதல் குழந்தை இலக்கியப் பாடல் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்காகவே பல்வேறு பாடல்களை எழுதி வாழ்நாளை கழித்தார். அவரது எழுத்தில் வெளியான பிரபலமான பாடல்களில் சில பின்வருமாறு.

அணிலே, அணிலே, ஓடிவா!

அழகு அணிலே ஓடிவா!

கொய்யா மரம் ஏறிவா!

குண்டுப்பழம் கொண்டு வா!

பாதிப் பழம் உன்னிடம்!

பாதிப் பழம் என்னிடம்!

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!

மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

அல்வா போல் மாம்பழம்

தங்க நிற மாம்பழம்

உங்களுக்கும் வேண்டுமா?

இங்கு ஓடி வாருங்கள்,

பங்கு போட்டுத் தின்னலாம்

இதையும் படிங்க: ஜி20 தலைமைத்துவத்தின் இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் வெளியிடுகிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.