ETV Bharat / bharat

இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...

author img

By

Published : Apr 29, 2022, 3:26 PM IST

Updated : Apr 29, 2022, 3:37 PM IST

பெங்களூருவில் மின்சாதனங்கள் குறித்த செமிகான் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

PM Modi inaugurates Semicon India conference in Bengaluru
PM Modi inaugurates Semicon India conference in Bengaluru

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னனுவியல் துறை சார்பில் செமிகான் இந்தியா 2022 மாநாடு இன்று (ஏப். 29) தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், "உலகளாவிய செமிகண்டக்டர் வினியோக சங்கிலியில் இந்தியாவை முக்கிய பங்குதாரர் நாடாக மாற்றுவதே நமது கூட்டு நோக்கம். உயர் தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாம் விரும்புகிறோம்.

இந்தியா ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை

1.3 பில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்களை இணைப்பதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உள்ளார்ந்த நிதிசேவை, வங்கியியல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியில், இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் மிகப்பெரியது. சுகாதாரம் மற்றும் குடும்பநலம் முதல் அதிகாரம் அளித்தல் வரை அனைத்து வகையான ஆளுகையிலும் வாழ்க்கையை மாற்றியமைக்க நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

ஆறு லட்சம் கிராமங்களை, அகன்றகற்றை முதலீட்டில் 5 ஜி, ஐஓடி மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் மூலம் தொழில்நுட்ப புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது. உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது.

இந்தியாவின் சொந்த செமிகண்டக்டர் பயன்பாடு 2026இல் 80 பில்லியன் டாலரையும், 2030இல் 110 பில்லியன் டாலரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் தொடங்குவதை எளிதாக்குவதை மேம்படுத்த விரிவான சீர்த்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

உற்பத்தித் துறையில் மாற்றம்

செமிகண்டக்டர் வடிவமைப்பு திறன்மிகுந்தவர்கள் நம்மிடையே பெருமளவில் உள்ளனர். இது உலகளவிலான செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20 விழுக்காடாகும். ஏறத்தாழ முதல் 25 செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், அவற்றின் சொந்த வடிவமைப்பு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நம் நாட்டில் கொண்டுள்ளன.

உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக்கூடிய பெருந்தொற்று பாதிப்பை மனிதகுலம் எதிர்கொண்டு வரும் வேளையில், நமது மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

வரலாறு காணாத வளர்ச்சி

அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை வரலாறு காணாத வளர்ச்சி அடையும். 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த மதிப்பீட்டில் செமி- கான் இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது. செமி கண்டக்டர் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இந்தியா என்றால் வர்த்தகம்

தொழில்துறை கடினமாக பாடுபட்டால், அரசு அதைவிட மேலும் கடினமாக பாடுபடும். புதிய உலக நடைமுறை உருவாகி வருவதற்கேற்ப புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம்" என்றார். இந்த நிகழ்வில், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் AFSPA சட்டம் விலக்கப்படும்- பிரதமர் மோடி

Last Updated :Apr 29, 2022, 3:37 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.