ETV Bharat / bharat

தீபாவளியையொட்டி பிரதமர் மோடி அயோத்தியாவுக்கு பயணம்

author img

By

Published : Oct 22, 2022, 11:49 AM IST

தீபாவளியையொட்டி வரும் 23ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.

PM Modi in Ayodhya on Diwali eve
PM Modi in Ayodhya on Diwali eve

லக்னோ: தீபாவளி பண்டிகை வரும் அக்.24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு அக். 23ஆம் தேதிபயணம் மேற்கொள்கிறார். மாலை 5 மணியளவில் பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை ஆய்வு செய்கிறார். மாலை 5.45 மணியளவில் பகவான் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை மேற்கொள்கிறார். 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார்.

பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தை தொடங்கிவைக்கிறார். இந்தாண்டு தீப உற்சவத்தின் 6ஆவது பதிப்பு நடைபெறுகிறது. முதல் முதலாக பிரதமர் மோடி இதில் நேரடியாக கலந்து கொள்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்படும். தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பார்வையிடுகிறார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமமாகும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.