ETV Bharat / bharat

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...

author img

By

Published : Nov 19, 2022, 9:34 AM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 17 பணி நாட்கள் நடைபெறும் என மத்திய அமைச்சர்9 பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் 2022 டிசம்பர் 7 தொடங்கி டிசம்பர் 29 வரை 23 நாட்களுக்கு 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும். மத்தியில் அம்ரித் கால் சட்டமியற்றும் அலுவல் மற்றும் பிற விஷயங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்நோக்குகிறோம்." என தெரிவித்துள்ளார்.

அமர்வின் முதல் நாளில், இறந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்புள்ளது. சமீபத்தில் இறந்த எம்பி களில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒருவர்.

கரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாலும், மக்களவை மற்றும் ராஜ்யசபா செயலகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டதால், இந்த அமர்வு கட்டுப்பாடுகள் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கரோனாவால் நாடாளுமன்ற அமர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தது.

மாநிலங்களவைத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மேல் சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல் அமர்வு இதுவாகும். வரும் கூட்டத் தொடரின் போது நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்களின் பட்டியலை அரசாங்கம் உருவாக்கும். அதேநேரம் எதிர்கட்சிகள் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்க கோரும்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவில் பிஸியாக இருப்பதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 23 பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.