ETV Bharat / bharat

வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்துங்கள் - ஓவைசி வேண்டுகோள்

author img

By

Published : Aug 26, 2022, 12:52 PM IST

வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியான முறையில் நடத்துமாறு ஹைதராபாத் இஸ்லாமியர்களுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார்.

Etv Bharatவெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்துங்கள் - ஓவைசி வேண்டுகோள்
Etv Bharatவெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்துங்கள் - ஓவைசி வேண்டுகோள்

ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர் டி ராஜா சிங்கை மீண்டும் நேற்று (ஆகஸ்ட் 25) ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இன்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியான முறையில் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், முகமது நபியைப் பற்றிய கருத்துக்காக பாஜக தலைவர் டி ராஜா சிங்கை கைது செய்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் "பெரிய கோரிக்கை" நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்காக தெலங்கானாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து ராஜா சிங் தடுப்புக் காவல் சட்டத்தின் (PD Act) கீழ் கைது செய்யப்பட்டு, செரியாப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை ஹைதராபாத் காவல்துறை உறுதிபடுத்தியது.

இது குறித்து ஓவைசி கூறுகையில், "நாட்டின் நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய கோஷங்கள் எதையும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு எழுப்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

101 குற்ற வழக்குகள் :"எங்கள் மிகப்பெரிய கோரிக்கை அவரை கைது செய்ய வேண்டும் என்பதே, அக்கோரிக்கை PD சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதியான வெள்ளிக்கிழமை தொழுகையை உறுதி செய்ய அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். காவல்துறை அளித்த தகவலின் படி, "18 வகுப்புவாத குற்றங்களில் ஈடுபட்ட ராஜா சிங் மீது 101 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

"டி.ராஜா சிங் பி.டி. சட்டத்தின் கீழ், ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த பேசிய காவல்துறையினர், ‘சிங் "வழக்கமாக ஆத்திரமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் பேச்சுகளை பேசி வருகிறார்" மற்றும் "பொதுக் குழப்பத்திற்கு வழிவகுக்கும் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகிறார்" என்று போலீசார் தெரிவித்தனர்.

யூடியூப்பில் சிங் வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு, இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தெலுங்கானாவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் "சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது, ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் அமைதி தன்மையை இந்த சர்ச்சை கருத்து சீர்குலைத்தது.

இந்த சர்ச்சை கருத்துக்கு அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 295, மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் டபீர்புரா காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ., எம்.எல்.ஏ.வை சஸ்பெண்ட் செய்ததுடன், அவரது கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று பாஜக தலைமை கூறியுள்ளது.

இதையும் படிங்க:வெறுப்புப்பேச்சின் விளைவாக ஹைதராபாத் பதற்றமாகவுள்ளது என்ற ஓவைசி... பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.