ETV Bharat / bharat

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 45 பேர் இடைநீக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 4:59 PM IST

Updated : Dec 18, 2023, 7:30 PM IST

மாநிலங்களையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 45 பேர் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 13 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஒ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச. 18) மக்களவை வழக்கம் போல் கூடிய நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்பட 31 பேர் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், கே. ஜெயகுமார், அப்துக் காலிக் ஆகியோர் சபாநாயகர் இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டதாக முன்னுரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

  • #WATCH | Several Rajya Sabha MPs, including Congress' Jairam Ramesh, Randeep Surjewala and KC Venugopal, suspended for the remainder of the Winter Session of the Parliament. pic.twitter.com/cJi3ZkscuE

    — ANI (@ANI) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து 45 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜெவாலா உள்ளிட்ட 45 எம்.பிக்கள் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 34 எம்.பிக்கள் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள 11 பேர் முன்னுரிமை குழுவின் விசாரணை அறிக்கை வரும் வரை இடை நீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 3 மாதங்களுக்குள் முன்னுரிமை குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்களவையில் அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 70க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!

Last Updated : Dec 18, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.