ETV Bharat / bharat

மகிழ்ச்சியான ஓய்வுபெற முதலீடு செய்யுங்கள் - தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்(NPS) உதவியோடு..!

author img

By

Published : Jun 25, 2023, 1:47 PM IST

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஒரே திட்டத்தில் பல்வேறு முதலீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை அளித்து மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையையும் அளிக்கிறது.

மகிழ்ச்சியான ஓய்வு பெற முதலீடு செய்யுங்கள்!தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்(NPS) உதவியோடு..
மகிழ்ச்சியான ஓய்வு பெற முதலீடு செய்யுங்கள்!தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்(NPS) உதவியோடு..

ஐதராபாத்: ஓய்வு பெறுவதையும் சேமிப்பையும் பற்றிப் பேசும்போது, அதற்கு இன்னும் நாட்கள் இருகின்றன என ஒவ்வொரு முறையும் இந்தப் பேச்சை தள்ளிப்போடுவது நம்மிடையே வழக்கம் ஆகிவிட்டது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆரம்ப காலங்களிலிருந்து வருமானம் ஈட்டும்போது இதற்கான திட்டமிடல் மிகவும் அவசியம்.

இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற பல திட்டங்கள் உள்ளன. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நமது தற்போதைய வருமானத்திற்கு சமமான எதிர்கால நிதியை அமைத்தல் வேண்டும்.

முன்கூட்டியே தொடங்குங்கள்: முதலீட்டுத் திட்டங்கள் என்பது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். நாம் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறோம் என்று வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 8% வட்டி விகிதம் கொடுக்கப்படும். இதனால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை 20-ம் ஆண்டு முடிவில் பெறலாம். இதுவே ஐந்து வருடங்கள் தாமதமாக தொடங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நிதி ரூ.15 லட்சமாக வரையறுக்கப்படும். எனவே, முதலீடுகளை எப்பொழுதும் முன்கூட்டியே தொடங்க வேண்டும்.

அதிக வருமானம் ஈட்டுவதற்கு : நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை மிஞ்சும் திறன் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம். நீண்ட கால முதலீட்டிற்கு ஈக்விட்டி அடிப்படையிலான திட்டங்களை (மியூச்சுவல் ஃபண்டுகள், என்பிஎஸ்) தேர்வு செய்தால் இரட்டை எண் இலக்க வருமானத்தைப் பெறலாம். 1995 முதல் நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு செய்தோம் என்று வைத்துக் கொண்டால், 1995 முதல் இப்போது வரை ஒவ்வொரு வருடமும் பலமுறை இரட்டை இலக்க வருமானத்தை அளித்து வரும். இதனால் நீண்ட கால முதலீட்டில் எந்த இழப்பும் ஏற்படாது என்பதை பங்குகளில் முதலீடு செய்யும்போது மனதில் கொள்ள வேண்டும்.

குறைந்த கட்டணத்தில்: சந்தை அடிப்படையிலான திட்டங்களில் முதலீடு செய்யும் போது சில கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, குறைந்த சதவீத கட்டணங்கள் கொண்ட திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. பண மேலாண்மை செலவு 25ஆண்டுகளில் 1 சதவீதமாக இருந்தாலும், நிதி 10-15 சதவீதம் வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதுவே குறைந்த நிதி மேலாண்மைச் செலவுகளை செலுத்தினால், 12 முதல் 15 சதவிகிதம் அதிக நிதியைப் பெறலாம்.

வரிச்சுமை இல்லாமல்: முதலீட்டுப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ள வரிச் சலுகைகளையும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடு, வருமானம் மற்றும் முதிர்வுத்தொகைக்கு வரி கிடையாது. ஒவ்வொரு திட்டத்தைப் பொறுத்து வரிச் சலுகைகள் மாறுபடும்.

NPS மற்றும் EPF போன்ற திட்டங்கள் அனைத்து நிலைகளிலும் வரிச் சலுகைகளை (விதிகளால் அனுமதிக்கப்படும் அளவிற்கு) வழங்குகின்றன. எனவே, மற்ற திட்டங்களை ஒப்பிடும் போது NPS மற்றும் EPF வரிச்சுமை குறைவு. இவை அனைத்தையும் மனதில் வைத்து, ஒரே திட்டத்தில் அனைத்து நன்மைகளையும் பெற விரும்பினால், ஈக்விட்டிகள், கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் போன்றவை அனைத்தும் என்பிஎஸ்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன.

முதலீட்டுத் திட்டங்கள் வயதுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, ஆபத்து குறைவாக உள்ளது. மற்ற ஃபண்டுகளின் நிர்வாகச் செலவுகளுடன் ஒப்பிடும்போது சுமார் 1/15 குறைந்த செலவில் முதலீடுகளைச் செய்யலாம். நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், பல்வேறு திட்டங்களின் கூட்டுப் பலன் கிடைக்கிறது.

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கார்ப்பரேட் NPS-ஐ வழங்குகின்றன. அடிப்படை சம்பளத்தில் (டிஏ உட்பட) 10 சதவீதத்தை கார்ப்பரேட் என்பிஎஸ்-ல் முதலீடு செய்யலாம். இது பிரிவு 80CCD (2)-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறுகிறது. எனவே, இது வரிச்சுமையைக் குறைக்கவும் உதவுகிறது.

NPSஆனது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கண்காணிக்கப்படுகிறது. இந்த நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நிதி மேலாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. எனவே, முதலீட்டில் ஆபத்து அதிகம் இல்லை.

இதையும் படிங்க:Health Insurance: தொல்லை இல்லாத மருத்துவ சேவை திட்டமா? - இந்த மருத்துவ காப்பீடு தான் பெஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.