ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு?

author img

By

Published : Apr 24, 2022, 2:15 PM IST

Updated : Apr 24, 2022, 3:14 PM IST

ஜம்மு-காஷ்மீர் சம்பாவில் உள்ள பாலி கிராமத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் இடத்தில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மூ-காஷ்மீரில் குண்டு வெடிப்பு!- பிரதமர் மோடி வருகைக்கு பலத்த பாதுகாப்பு!
ஜம்மூ-காஷ்மீரில் குண்டு வெடிப்பு!- பிரதமர் மோடி வருகைக்கு பலத்த பாதுகாப்பு!

ஜம்மு- காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீருக்கு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் உரையாட இருக்கிறார். இந்நிலையில் இன்று மோடி பேச காத்திருக்கும் இடத்திற்கு சுற்று புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஜம்முவில் உள்ள பிஷ்னா பகுதியில் உள்ள பாலி கிராமத்தில் திறந்தவெளி விவசாய நிலம் ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அக்கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி வரும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே ஜம்மு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் படியான தாக்குதல்கள் நடந்து வந்தன.

ஜம்முவில் பிரதமர் மோடி: இன்று (ஏப்.24) ஜம்முவிற்கு செல்லும் பிரதமர் மோடி 20,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நீர்நிலைகளின் பாதுகாப்பிற்காக அம்ரித் சரோவர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 3,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்கிறார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு மோடி ஜம்மு-காஷ்மீர் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜம்மூ- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், ரயில்வே போலீசார் உயிரிழப்பு!

Last Updated : Apr 24, 2022, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.