ETV Bharat / bharat

NEETஇல் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு - பிரதமருடன் அமைச்சர் பூபேந்திர் யாதவ் சந்திப்பு

author img

By

Published : Jul 29, 2021, 12:32 PM IST

நீட் தேர்வுக்கான அகில இந்திய கோட்டாவில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தலைமையிலான குழு கோரிக்கை வைத்துள்ளது.

OBCs in NEET
OBCs in NEET

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் அகில இந்திய கோட்டாவில் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(OBC) இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துவருகிறது.

குறிப்பாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது இதே கோரிக்கையை உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எழத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களவை உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது. அகில இந்தியா கோட்டாவில் உள்ள குளறுபடியை களைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • PM Sh @narendramodi ji has been sensitive to the inclusion of the marginalised in the mainstream. MPs today submitted to the PM a letter seeking intervention in quota for OBC candidates under all-India quota in NEET entrance exams. pic.twitter.com/n6TGtSjh5l

    — Bhupender Yadav (@byadavbjp) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பின்னர் பேசிய பூபேந்தர் யாதவ், சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த அரசுகளில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என அனைத்து பிரிவினரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒரே அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் என்றார்.

எனவே இவ்விவகாரத்திலும் மோடி தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவிட் லாக்டவுன்- இந்திய பெண்கள் ஊட்டச்சத்து பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.