ETV Bharat / bharat

ஆர்டிஐ மனுவிற்கு 8500 பக்கத்தில் பதில் - மாட்டு வண்டி கட்டி எடுத்துச்சென்ற ஆர்வலர்

author img

By

Published : Nov 5, 2022, 1:18 PM IST

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்டிஐ(தகவல் அறியும் உரிமை சட்டம்) ஆர்வலர் ஒருவரின் ஆர்டிஐ மனுவிற்கு அளிக்கப்பட்ட 8500 பக்கங்கள் கொண்ட பதில்கள் அடங்கிய தரவுகளை மாட்டு வண்டி கட்டிக் கொண்டு எடுத்துச் சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Etv Bharatஆர்டிஐ மனுவிற்கு 8500 பக்கத்தில் பதில் -  மாட்டு வண்டி கட்டி எடுத்துசென்ற ஆர்வலர்
Etv Bharatஆர்டிஐ மனுவிற்கு 8500 பக்கத்தில் பதில் - மாட்டு வண்டி கட்டி எடுத்துசென்ற ஆர்வலர்

மத்திய பிரதேசம் : மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பைராத் கிராமத்தில் வசிக்கும் மக்கன் தாகத் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அறிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். பைராத் கிராம பஞ்சாயத்தில் மோசடி நடந்திருப்பதாக உள்ள சந்தேகத்தின் பேரில் இந்த ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவிற்கான அனைத்து தகவல்களும் அடங்கிய 8500 பக்கங்கள் கொண்ட தரவுகளை திரும்ப பெற்றுள்ளார். இந்த தரவுகளை எடுத்துச் செல்ல மாட்டு வண்டியை உபயோகப்படுத்தினார். இச்சம்பவம் அம்மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. , பைராத் நகர் பஞ்சாயத்து கொள்கைகளை அமல்படுத்துவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பதில்களைக் கோரி ஆர்டிஐ விண்ணப்பத்தை அளித்திருந்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, ‘ பைராத் கிராமத்தின் முறைகேடுகள் குறித்து தெரிந்து கொள்ள முயன்ற போது இதற்கான செயல்முறை நீண்டது. இந்த தாமதம் என்னை நிதி ரீதியாக சோர்வடையச் செய்துள்ளது, எனக் கூறினார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் வெற்று காகிதத்தில் மட்டுமே உள்ளன.

உண்மையில், அத்தகைய திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. பிரதமரின் இலவச வீட்டுத் திட்டம் மற்றும் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சம்பல் 2.0 போன்ற அரசாங்கக் கொள்கைகளும் கிடப்பில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்காக முதலில் விண்ணப்பித்த போது தகவல்கள் சரியாக கிடைக்காததால் தற்போது ரூ.25000 செலவு செய்து இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:போலி சாதி சான்றிதழ் தயாரித்த விவகாரம்; 3 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கு சிறை...

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.